சிம்புவைச் சேர்த்துக் கொண்டதால் வெற்றி மாறனுக்கு தொல்லை.. கலைப்புலி தாணு பாவம்ப்பா.. கெஞ்சாத குறைதான்

சென்னை: நடிகர் சிம்பு தற்போது வெற்றி மாறன் உடன் இணைந்து அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, வெற்றி மாறன் இயக்குகிறார். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக படம் வட சென்னை கால கட்டத்தில் நடக்கும் மற்றொரு கதை என்பதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் வடசென்னை படத்தின் யுனிவர்ஸ் உடன் இணைந்து வருகிறதா? இல்லையா என்பது குறித்து படம் வெளியாகும்போதுதான் தெரியவரும். இந்நிலையில் இந்த படத்தின் மூலம் வெற்றி மாறன் மற்றும் கலைப்புலி எஸ் தாணு என இருவருக்கும் தலைவலி உருவாகி உள்ளது.

அதாவது சிம்பு தனக்கு கால் ஷீட் கொடுப்பதாக கூறி விட்டு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்பு மீது வழக்கு தொடுத்திருந்தார். இதனால் சிம்புவுக்கு ரெட் கார்டு எல்லாம் வழங்கப்பட்ட சம்பங்கள் கடந்த காலங்களில் நடந்து. மேலும் ஐசரி கணேஷ் வழக்கு தொடுத்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி இருக்கும்போது, ஒரு கட்டத்தில் சிம்பு கால் ஷீட் தருவதாக கூறியதாகவும், அதை நம்பி, ஐசரி கணேஷ் வழக்கை வாபஸ் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

Vetri Maaran And Kalai Puli S Thanu in Struggle For Clash Between Simbu And Isari Ganesh

கோபத்தில் ஐசரி கணேஷ்: ஆனால் இங்கு என்ன பிரச்னை என்றால், ஐசரி கணேஷ் வழக்கை வாபஸ் வாங்கிய பின்னர் சிம்பு கால் ஷீட் கொடுக்கவில்லையாம். இதனால் கடும் கோபமடைந்த ஐசரி கணேஷ், தன்னை சிம்பு ஏமாற்றிவிட்டார். எனவே, அவரது படம் வரும்போது இந்த பிரச்னையை பெரிதாக்கலாம் என்று காத்துக் கொண்டு இருக்கிறாராம். இந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட வெற்றி மாறன் மற்றும் கலைப்புலி எஸ். தாணு என இருவரும் ஐசரி கணேஷிடம் நேரடியாகவே சென்று இது தொடர்பாக பேசியுள்ளார்கள். ஆனால் ஐசரி கணேஷோ, சிம்பு தன்னை ஏமாற்றிவிட்டார். எனவே, அவருக்கு தான் பதில் கொடுத்தே ஆகவேண்டும் என்று மிகவும் காட்டமாக கூறி அனுப்பிவிட்டாராம்.

Vetri Maaran And Kalai Puli S Thanu in Struggle For Clash Between Simbu And Isari Ganesh

இப்போதைய முடிவு: இதற்கிடையில் வெற்றி மாறனும் தாணுவும் இந்த படத்தின் வேலைகளைத் தொடரலாம் என்றும் கொஞ்ச காலத்திற்குப் பின்னர் இந்த பிரச்னையை பேசிப் பார்க்கலாம் என்றும் முடிவெடுத்துள்ளார்களாம். இது தொடர்பான தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிம்பு மீது உள்ள கோபத்தை ஐசரி கணேஷ் வெளிப்படுத்தினால், அரசன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுவிடுமே என்று பேசி வருகிறார்கள். அரசன் படத்தின் புரோமோ வீடியோ எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X