»   »  கள்ளன் படத்தின் இரண்டாவது போஸ்டர்... வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்!

கள்ளன் படத்தின் இரண்டாவது போஸ்டர்... வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள கள்ளன் படத்தின் இரண்டாவது போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் நேற்று மாலை வெளியிட்டு வாழ்த்தினார்.

எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி மதியழகன், ஆர் ரம்யா தயாரித்துள்ள படம் கள்ளன்.


இந்தப் படத்தில், வேட்டைக்காரர் சமூகத்தைச் சேர்ந்த கிராமத்து இளைஞராக கரு பழனியப்பன் நடித்துள்ளார். நாயகியாக நிகிதா அறிமுகமாகிறார். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.


Vetri Maaran released the second poster of Kallan

எந்தப் பெண் இயக்குநரும் தொடத் துணியாத புதிய களத்தை தேர்வு செய்துள்ளார் சந்திரா. இவர் இயக்குநர் அமீரின் 'ராம்,' 'பருத்தி வீரன்,' 'யோகி,' இயக்குநர் ராமின் 'கற்றது தமிழ்' ஆகிய படங்களில் உதவி டைரக்டராக, இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.


''விவசாய சமூகம் உருவாவதற்கு முன்பு வாழ்ந்த வேட்டை சமூகம் இன்றைக்கு இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாக நின்று சொல்லும் படம் இது," என்கிறார் சந்திரா.


எம்.எஸ்.பிரபு, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களுக்கு கே. இசையமைத்துள்ளார்.


Vetri Maaran released the second poster of Kallan

இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்களை தனது குருநாதர் அமீர் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனியை வைத்து வெளியிட்டார் சந்திரா.


நேற்று படத்தின் இரண்டாவது தோற்றப் போஸ்டர் வெளியானது. இதனை இயக்குநர் வெற்றிமாறன் நேற்று மாலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் இயக்குநர் சந்திரா, தயாரிப்பாளர் மதியழகன், பிஆர்ஓ வீகே சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
Director Vetri Maaran has released the second poster of Chandra's Kallan movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil