Bad Girl: பேட் கேர்ள் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில் நேற்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் 'பேட் கேர்ள்'. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
பேட் கேர்ள் படத்தின் ஹீரோயினான ரம்யாவிற்கு படிப்பு வரவில்லை. ஆனால் படிப்பிற்கு பதிலாக பள்ளி பருவத்திலேயே தன்னுடம் படிக்கும் சக மாணவரான நலனின் மீது காதல் வருகிறது. ஆரம்பத்தில் நன்றாக சென்ற இவர்களின் காதல் விவகாரம், ஒரு கட்டத்தில் பெற்றோர்களுக்கு தெரிய வர, ஆத்திரப்பட்ட பெற்றோர், வழக்கம் போல் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு, ரம்யாவை வேறு ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டு, பள்ளியில் விடுவது மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது என பல கெடுபிடிகளை விதிக்கின்றனர்.

பேட் கேர்ள்: அம்மா, ரம்யாவை ஸ்கூலில் விடுவதற்காக செல்லும் போதே இந்த ஸ்கூல் வரைக்கு தான் உன் பேச்சை கேட்பேன், கல்லூரியில் என் இஷ்டம், எனக்கு பிடித்ததை செய்வேன், உனக்கு பிடிக்காததையும் செய்வேன் என்று செல்கிறாள். அதற்கு தகுந்தது போலவே அங்கு ஒரு பையனுடன் காதல் ஏற்பட்டு அது கட்டில் வரை செல்கிறது. ஆனால், அவன், படிப்பு முடிந்ததும் ரம்யாவை கழட்டி விட பார்க்கிறான். இது பற்றி எதுவுமே தெரியாத ரம்யா, அவனையே சுற்றி சுற்றி வருகிறாள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கடும் மோதல் வருகிறது. அதன் பின் ரம்யா என்ன செய்தாள், அவள் சரியான காதலை கண்டுப்பிடித்தாளா என்பதே பேட் கேர்ள் படத்தின் கதை.
சிறப்பான நடிப்பு: இந்த காலத்து பெண்களோ, ஆண்களோ தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி சுதந்திரமாக இருக்க வேண்டும் என நினைத்து வாழ்க்கைக்கு தேவையில்லாததை செய்து வருகிறார்கள். அதைத்தான் இந்த படத்தின் இயக்குநர் வர்ஷா துணிச்சலுடன் சொல்லி இருக்கிறார். படத்தின் டீசர் வெளியான போதே இந்த படத்திற்கு பலவிதமான எதிர்ப்பு வந்தன. இந்த அடைபட்ட உலகத்தில் ஒரு பெண் சுதந்திரமாக வாழ நினைக்கிறாள், அவள் எண்ணம் அவளை எங்கெங்கு கொண்டு செல்கிறது, அவளுடன் யார் யார் துணை நின்றார்கள், யார் என்ன பேசினார்கள் என்பதை வர்ஷா தெளிவாக படத்தில் கூறியுள்ளார். படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கும் அஞ்சலி சிவராமன் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பான நடிப்பாக நடித்துள்ளனர்.
முதல் நாள் வசூல்: இத்திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் நாள் வசூல், sacnilk தகவலின் படி உலக அளவில் படம் முதல் நாளில் ரூ.12லட்சத்தை வசூலித்துள்ளது. தமிழகத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் நேற்று தியேட்டரில் வெளியானதால், பெரும்பாலான தியேட்டர்களில் மதராஸி திரைப்படமே திரையிடப்பட்டன. பேட் கேர்ள் படம் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டதால், படத்தின் வசூல் குறைத்து இருக்கலாம். ஆனால், வாரா இறுதி நாட்களில் இப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











