»   »  விசாரணை இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாரா?... ஆச்சரியப்படும் வெற்றிமாறன்

விசாரணை இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாரா?... ஆச்சரியப்படும் வெற்றிமாறன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த வாரம் வெளியாகி பலரது பாராட்டுகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளிய விசாரணை திரைப்படம் அடுத்தததாக இந்திக்கும் செல்கிறது.

காவல்துறையின் விசாரணை முறைகளில் அப்பாவி இளைஞர்கள் சிக்கித் தவிப்பதை எந்தவித சமரசமும் இல்லாமல் இயக்குநர் வெற்றிமாறன் காட்சிப் படுத்தியிருந்தார்.

ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டில் தொடர்ந்து நனைந்து வரும் வெற்றிமாறனுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது விசாரணை.

Vetri Maran's Visaranai Remade in Hindi

ஆமாம் இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் கைப்பற்றி இருக்கிறார். பிரியதர்ஷன் இயக்கும் இப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் விசாரணை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் இந்தத் தகவலை மறுத்திருக்கிறார். இதுகுறித்து வெற்றிமாறன் " விசாரணை படத்தின் இந்தி உரிமையை இயக்குநர் பிரியதர்ஷன் கைப்பற்றி இருப்பது உண்மைதான்.

ஆனால் அக்ஷய்குமார் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இந்த வார இறுதியில் அக்ஷய்குமார் விசாரணை படத்தை பார்க்க இருக்கிறார்.அது மட்டும்தான் உண்மை" என்று கூறியிருக்கிறார்.

பிரியதர்ஷனின் நல்ல நண்பரான அக்ஷய்குமார் அவரது முந்தைய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Confirmed: Vetri Maran's Visaranai are Currently being Remade in Hindi Language. The Hindi Remake Rights for Visaranai have been bought by director Priyadarshan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil