»   »  தல, ஷூட்டிங்ஸ்பாட்டில் யாருக்கும் தெரியாம இப்படி ஒரு வேலை பார்க்கிறீங்களா?

தல, ஷூட்டிங்ஸ்பாட்டில் யாருக்கும் தெரியாம இப்படி ஒரு வேலை பார்க்கிறீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படப்பிடிப்பு தளத்தில் யாருக்கும் தெரியாமல் அஜீத் ஒரு காரியம் செய்து வருகிறாராம்.

வீரம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து இயக்குனர் சிவா, அஜீத் மீண்டும் கூட்டணி சேர்ந்த படம் விவேகம். இந்த படத்திற்காக அஜீத் சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.

அவரது மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்ல திரையுலகினரும் மிரண்டு போயுள்ளனர். இந்நிலையில் விவேகம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி கூறியிருப்பதாவது,

ஹாலிவுட்

ஹாலிவுட்

விவேகம் படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு வர வேண்டும் என்று நினைத்து பார்த்து பார்த்து வேலை செய்துள்ளோம். இந்த படத்திற்காக நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்.

டீஸர்

விவேகம் படத்தின் டீஸருக்கு கிடைத்து அமோக வரவேற்பை பார்த்த பிறகு எங்களின் உழைப்பு வீண் போகவில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம்.

அஜீத்

அஜீத்

அஜீத் தனது காட்சிகள் முடிந்தவுடன் கேரவனுக்குள் சென்று உட்காரும் ஆள் கிடையாது. யார் எதை நன்றாக செய்தாலும் மனம் விட்டு பாராட்டுபவர் அஜீத். அஜீத்தின் பாராட்டுகள் எங்களுக்கு ஊக்கம் அளித்தது.

புகைப்படம்

புகைப்படம்

படப்பிடிப்பு தளத்தில் யாருக்கும் தெரியாமல் மற்றவர்களை அழகாக புகைப்படம் எடுப்பார் அஜீத். என்னை அவர் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது.

வருத்தம்

வருத்தம்

விவேகம் படத்தில் வேலை செய்தபோது அஜீத் எனக்கே தெரியாமல் என்னை அழகாக புகைப்படம் எடுத்து அனுப்பினார். அதை பார்த்து எனக்கு இருந்த வருத்தம் போய்விட்டது என்றார் வெற்றி.

English summary
Vivegam cinematographer Vetri has revealed a secret about Ajith. Ajith takes pictures of people in the shootingspot without their knowledge, said Vetri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil