அரசன்.. வெற்றிமாறன் - சிம்பு இணையும் படம்.. ஆத்தாடி டைட்டிலே வேறமாதிரி சம்பவமா இருக்கே!

சென்னை: சிம்புவும், வெற்றிமாறனும் இணைந்திருக்கும் படத்தின் மீதுதான் பலருக்கும் கவனம் இருக்கிறது. இரண்டு பேருமே சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆன பிறகு இப்போதுதான் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் பெயர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு வெளியாகியிருக்கிறது.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இதுவரை ஏழு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். அவற்றில் மூன்று படங்களில் தனுஷுடன் வேலை செய்திருக்கிறார். தனுஷுக்கு போட்டியாக கருதப்படும் சிம்புவுடன் அவர் இணையாமல் இருந்தார். வடசென்னை படத்தில் முதலில் எஸ்டிஆர்தான் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அது நிறைவேறாமல் போனது. எனவே எப்போது இவர்கள் இணைவார்கள் என்ற கேள்வி எழுந்திருந்தது.

செம சர்ப்ரைஸ்: சிம்புவும் தற்போது கரியரில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை ஃபுல் ஃபார்மில் உழைத்துவரும் அவர்; கதைகளையும், இயக்குநர்களையும் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறார். தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கும் அவர்; வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற சர்ப்ரைஸான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

Vetrimaaran and Simbu s New Movie Title as Arasan

வடசென்னை யுனிவர்ஸ்: இரண்டு பேரும் இணையும் படம் வடசென்னை படத்தின் இரண்டாவது பாகமாக இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் அதனை வெற்றிமாறன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும் இது வடசென்னை 2 இல்லை; அதேசமயம் வடசென்னை யுனிவர்ஸில் இந்தப் படம் வரும் என்று அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்துவிட்டார்.

தாமதமான ப்ரோமோ: படத்துக்கான ப்ரோமோ ஷூட்டிங் அண்மையில் நடைபெற்றது. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவுடன் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இருந்தார். ஒருவேளை அவரும் இதில் நடிப்பாரோ என்ற கேள்வியும் இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க படத்தின் ப்ரோமோ சில நாட்களுக்கு முன்பே வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தாமதமானது. அதேசமயம் படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கூறியிருந்தார்.

ரிலீஸான ப்ரோமோ: அறிவித்தபடி இன்று படத்தின் பெயர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு வெளியாகியிருக்கிறது. படத்துக்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. போஸ்டரில் சிம்பு 80ஸ் கெட்டப்பில் கையில் அரிவாளுடன் நின்றுகொண்டிருக்கிறார் இதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தக் கூட்டணி இணைந்து பெரிய படத்தை கொடுக்கப்போகிறது. இது இன்டஸ்ட்ரி ஹிட்டாக அமையும் என்று நம்பிக்கையோடு கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X