»   »  ஓவர் வாய்... கழட்டி விடு அந்த ஜிவி பிரகாஷை... - தனுஷின் முடிவை செயல்படுத்திய வெற்றிமாறன்!

ஓவர் வாய்... கழட்டி விடு அந்த ஜிவி பிரகாஷை... - தனுஷின் முடிவை செயல்படுத்திய வெற்றிமாறன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் தான்.

பொல்லாதவன் படத்திலிருந்தே இந்த கூட்டணி தொடர்கிறது. தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாது தான் தயாரிக்கும் படங்கள், தன் உதவியாளர்கள் இயக்கும் படங்கள் என எல்லாவற்றுக்குமே ஜிவி.பிரகாஷ் தான் இசை என்பதில் பிடிவாதமாக இருப்பார் வெற்றி.

நேற்று பூஜையுடன் தொடங்கிய வடசென்னை படத்துக்கும் ஜிவி.பிரகாஷ்தான் இசையமைப்பதாக சொல்லி வந்தார். ஆனால் இப்போது ஜிவிக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கப் போகிறாராம்.

Vetrimaaran avoids GV Prakash

காரணம் தனுஷ். ஆமாம், தனுஷுக்கு ஜிவி.பிரகாஷுக்கும் நெடுநாள் பனிப்போர் இருந்து வருகிறது.

3 படத்துக்காக ஜிவி.பிரகாஷை கமிட் செய்துவிட்டு பின்னர் அனிருத்தை அறிமுகப்படுத்தி ஜிவிக்கு போட்டியாகவே வளர்த்துவிட்டார் தனுஷ்.

இதில் ஆரம்பித்த மோதல் இன்னும் தொடர்கிறது. சமீபத்தில் வெளியான எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் கூட தனுஷை அதிகம் கிண்டல் பண்ணியிருந்தார் ஜிவி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
For the first time director Vetrimaaran is avoiding GV Prakash for his movie due to the later's cold war with Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil