»   »  தனுஷ் ஏங்கிக் கிடக்க வெற்றிமாறனுக்கு அடித்த ஜாக்பாட்?

தனுஷ் ஏங்கிக் கிடக்க வெற்றிமாறனுக்கு அடித்த ஜாக்பாட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை அடுத்து அவர் புதுப் படத்தில் நடிப்பாரா இல்லை அரசியலில் தொப்புக்கடின்னு குதிப்பாரா என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினி புது படத்திற்கான கதையை கேட்டுள்ளாராம்.

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

காலா படப்பிடிப்பின் இடையே இயக்குனர் வெற்றிமாறன் ரஜினியை சந்தித்து கதை சொல்லியுள்ளாராம். வெற்றிமாறன் ரஜினியை இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளார்.

ரஜினி

ரஜினி

வெற்றிமாறனிடம் ரஜினி கதை கேட்டது உண்மை தான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். வட சென்னை படத்தை அடுத்து ரஜினியை இயக்க விரும்புகிறார் வெற்றிமாறன்.

தனுஷ்

தனுஷ்

தனுஷை வைத்து வட சென்னை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படம்

படம்

வெற்றிமாறன்- ரஜினி படம் அடுத்த ஆண்டு துவங்கும் என்று கூறப்படுகிறது. காலா படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தனுஷ் துடிக்க வெற்றி மாறனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

English summary
Buzz is that Rajinikanth is going to act in Vetrimaaran's direction after completing Kaala being directed by Pa. Ranjith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil