வெற்றிமாறன் படங்களில் தொடரும் போலீஸ் அட்டாக்… எல்லாம் இதுதான் காரணமாம்

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கி விட்டன.

ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை பின்னணியாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் வெற்றிமாறன் அளித்த பேட்டியில், தனது படங்களில் காவல்துறையை அதிகம் தாக்கி எடுப்பது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

விடுதலை போஸ்ட் புரொடக்‌ஷன்

விடுதலை போஸ்ட் புரொடக்‌ஷன்

தமிழ்த் திரையுலகின் முக்கியமான இயக்குநரான வெற்றிமாறன், பொல்லாதவன் படம் மூலம் தனது கேரியரை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் படங்களையும் இயக்கினார். வெற்றிமாறன் தனது படங்களில் அதிகமாக காவல்துறையின் பலவீனங்களையும் அத்துமீறல்களையும் துணிந்து படமாக்கி வருகிறார். முக்கியமாக விசாரணை படத்தில் லாக்கப்பில் நடக்கும் கொடுமைகளை வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தப் படம் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்திலும், காவல்துறையின் அநீதிகள், என்கவுண்டர் பற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் வெற்றிமாறன் கொடுத்த பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த வெற்றிமாறன், "காவல்துறையை குறிப்பாக சொல்ல வேண்டும் என்ற எந்த எண்ணமும் கிடையாது. அவர்கள் தான் இங்கு இருக்கும் அமைப்பின் முகம். எப்போது நாம் அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுகிறோமோ, அப்போது அவர்களை பற்றியும் நாம் பேசாமல் இருக்க முடியாது. மக்கள் மீது அமைப்பின் ரீதியாக நடத்தப்படும் ஒடுக்கு முறைகள் அதிகம் காவல்துறை மூலம் தான் நடத்தப்படுகிறது. அதனால்தான் அதில் எனக்கு அதிக கவனம் இருப்பதாகக்" கூறியுள்ளார்.

விடுதலையும் அதே சூழல் தான்

விடுதலையும் அதே சூழல் தான்

விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ரஜீவ் மேனன் நடிப்பில் உருவாகும் விடுதலை படமும், வெற்றிமாறனின் இந்த விளக்கத்துக்கு நியாயம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படம், ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வருகிறது. விடுதலை படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. விடுதலை படப்பிடிப்பை பல மாதங்களாக நடத்தி வந்த வெற்றிமாறன் சமீபத்தில் தான் நிறைவு செய்தார்.

விரைவில் ரிலீஸ் அப்டேட்

விரைவில் ரிலீஸ் அப்டேட்

விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளதாம். அதேவேகத்தில் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகளை தொடங்கியுள்ளார் வெற்றிமாறன். இதனால் விடுதலை முதல் பாகம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விடுதலை திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இளையராஜாவின் இசை கச்சேரியுடன் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விடுதலை ஆடியோ ரிலீஸ் தேதியை, முதல் பாகத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X