அற்புதம்மாள் பயோபிக்கை இயக்கப் போகும் வெற்றிமாறன்.. தீயாய் பரவும் தகவல்.. ஹீரோயின் யார்?

சென்னை: 32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனது மகன் பேரறிவாளனை விடுவிக்க தனி நபராக போராடி வரும் அற்புதம்மாளின் பயோபிக்கை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசுரன் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த அடுத்த படங்கள் குறித்த ஹாட் அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அற்புதம்மாளின் பயோபிக்கில் இயக்குநர் வெற்றிமாறன் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

தேசிய விருது

தேசிய விருது

67வது தேசிய விருது விழாவில் அசுரன் படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை வென்றார் இயக்குநர் வெற்றிமாறன். அந்த படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. படத்தை தயாரித்த கலைப்புலி எஸ். தாணுவுக்கு சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது.

மீண்டும் இணைந்து

மீண்டும் இணைந்து

ஆடுகளம் படத்திற்காக ஏற்கனவே தேசிய விருது வென்ற தனுஷ் அசுரன் படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற நிலையில், மீண்டும் வெற்றிமாறன் தனக்கான என்ன கதையை எழுத போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என அடுத்த படத்திற்கான சிக்னலை கொடுத்துள்ளார். ஆனால், வெற்றிமாறன், விடுதலை, வாடிவாசல், விஜய் உடன் ஒரு படம் மற்றும் அற்புதம்மாளின் பயோபிக் என ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருக்கிறார். தனுஷும் 2024 வரை செம பிசி தான்.

விடுதலை எக்ஸ்க்ளூசிவ்

விடுதலை எக்ஸ்க்ளூசிவ்

விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தின் எக்ஸ்க்ளூசிவான பட ஸ்டில்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. சூரி ஹீரோவாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி குற்றவாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் 'விடுதலை' ரிலீசாக காத்திருக்கிறது.

Recommended Video

1000 Students Exam எழுதிருக்காங்க Vetrimaaran Pressmeet on Free Film Course | IIFC | Filmibeat Tamil
வாடிவாசல்

வாடிவாசல்

அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசலை இயக்கும் முயற்சியிலும் இயக்குநர் வெற்றிமாறன் ஈடுபட்டு வருகிறார். நாவல் கதைகளை படமாக்கி வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சி.க. செல்லப்பாவின் வாடிவாசல் எனும் நாவலை தழுவியே சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். அந்த நாவலுக்கு இப்போதே சூர்யா ரசிகர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் அமீர்

மீண்டும் அமீர்

வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்த இயக்குநர் அமீர் மீண்டும் வெற்றிமாறன் உடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. சூர்யாவின் வாடிவாசல் படத்தில் அமீர் தான் வில்லனா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜய்க்காக வெயிட்டிங்

விஜய்க்காக வெயிட்டிங்

பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானிடம் கதை சொல்லி விட்டு வந்த இயக்குநர் வெற்றிமாறன் தளபதி விஜய்க்கும் ஒரு பக்காவான கதையை சொல்லி அவருடன் இணைந்து படம் பண்ண காத்திருக்கிறார். பீஸ்ட், தளபதி 66 படங்கள் முடிந்ததும் வெற்றிமாறன் மற்றும் விஜய் இணையும் படம் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அற்புதம்மாள் பயோபிக்

அற்புதம்மாள் பயோபிக்

இப்படி அடுத்தடுத்து படு பிசியாக இருக்கும் வெற்றிமாறன் அற்புதம்மாளின் பயோபிக்கையும் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுவிக்கும் முயற்சியில் 32 ஆண்டுகளாக தனியாளாக ஒரு தாய் போராடும் வலியை திரையில் காட்டியாக வேண்டும் என்கிற முனைப்புடன் வெற்றிமாறன் உள்ளாராம்.

ஹீரோயின் யார்

ஹீரோயின் யார்

அற்புதம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் அந்த நடிகை யார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கூடிய விரைவிலேயே அற்புதம்மாள் பயோபிக் பற்றிய அறிவிப்பையும் அந்த படத்தில் பேரறிவாளனாகவும் அற்புதம்மாளாகவும் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்கா, பார்வதி, ராதிகா மற்றும் மஞ்சு வாரியரின் பெயர்களை ரசிகர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X