“பகை எப்படி முடிஞ்சுதுன்னு தெரியக்கூடாது”: மிரட்டும் வெற்றிமாறனின் பேட்டைக்காளி ட்ரெய்லர்

சென்னை: விடுதலை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், 'பேட்டைக்காளி' என்ற வெப் சீரிஸ்ஸையும் தயாரித்துள்ளார்.

ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ள 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ்ஸை ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

கலையரசன், கிஷோர், அம்மு அபிராமி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

வெற்றிமாறன் தயாரிப்பில் பேட்டைக்காளி

வெற்றிமாறன் தயாரிப்பில் பேட்டைக்காளி

வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம், இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தனது நிறுவனத்தின் சார்பில், ஆண்ட்ரியா நடிக்கும் 'அனல் மேலே பனித்துளி' என்ற படத்தை தயாரித்து வருகிறார். அதேபோல், 'பேட்டைக்காளி' என்ற வெப் சீரிஸ்ஸையும் தயாரித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு பின்னணியில் வெப் சீரிஸ்

ஜல்லிக்கட்டு பின்னணியில் வெப் சீரிஸ்

இந்த வெப் சீரிஸ் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலையரசன், அம்மு அபிராமி, கிஷோர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த இணையத் தொடரில் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டுப் பின்னணியில் அதனுள்ளே இருக்கும் வீரம், வன்மம், காதல் என அனைத்து உணர்வுகளையும் கொண்டு ரத்தமும் சதையுமாக உருவாகியுள்ளது இந்த தொடர்.

வெளியானது பேட்டைக்காளி ட்ரெய்லர்

வெளியானது பேட்டைக்காளி ட்ரெய்லர்

இந்நிலையில், பேட்டைக்காளின் வெப் சீரிஸ்ஸின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டை நேரடியாக பார்த்தவர்களுக்கு அதன் பின்னணி குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பேட்டைக்காளி வெப் சீரிஸ் அதனை முழுமையாக வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிரட்டலாக உருவாகியுள்ள பேட்டைக்காளி ட்ரெய்லர், வெப் சீரிஸ் மீதான் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

விடுதலை படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கும் 'ஜல்லிக்கட்டு' படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதனிடையே அவரது தயாரிப்பில் ஜல்லிக்கட்டை பின்னணியாக வைத்து பேட்டைக்காளின் என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பேட்டைக்காளி வெப் சீரிஸ், வரும் 21ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. முதன்முறையாக ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகியுள்ள வெப் சீரிஸ்ஸை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் வெற்றிமாறன், அதனை முடித்துவிட்டு விரைவில் 'ஜல்லிக்கட்டு' படத்தில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X