சிம்புவின் அரசன்.. ஒரே நைட்.. 2 கொலை.. அந்த ரவுடியின் வாழ்க்கைதான் கதையா?.. வெற்றிமாறனின் பெரிய சம்பவம்?

சென்னை: சிம்புவை வைத்து வெற்றிமாறன் அரசன் படத்தை இயக்கவிருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ப்ரோமோ நேற்று திரையரங்குகளில் வெளியானது. இன்று யூடியூபில் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க அரசன் படத்தின் கதை பற்றி ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திவருகின்றன.

வெற்றிமாறனும், சிம்புவும் முதன்முறையாக அரசன் படத்தில் இணைந்திருக்கிறார்கள். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த கூட்டணி இப்போது சேர்ந்திருப்பதால் இரண்டு பேரின் ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.கலைப்புலி தாணு பிரமாண்டமாக படத்தை தயாரிக்கிறார். யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் வேறு யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

ப்ரோமோ ரிலீஸ்: படத்தின் ப்ரோமோ நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. இன்று யூடியூபில் ரிலீஸாகவிருக்கிறது. இந்த ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசன் ப்ரோமோ ரசிகர்களிடையே ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. கண்டிப்பாக தனுஷுக்கு எப்படி ஒரு வடசென்னையை கொடுத்தாரோ அதேபோல் எஸ்டிஆருக்கும் தரமான சம்பவத்தை வெற்றி செய்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

Vetrimaaran s Arasan film starring Simbu is based on the life of Rowdy Mayilai Siva
Photo Credit:

என்ன கதை?: சூழல் இப்படி இருக்க ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில் படத்தின் கதை குறித்து தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. முதலில் வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் என்று பேசப்பட்டது. ஆனால் அதனை வெற்றிமாறன் மறுத்துவிட்டார். இது வடசென்னை யுனிவர்ஸில் நடக்கும் இன்னொரு கதை என்றும் விளக்கிவிட்டார். தற்போது வெளியாகியிருக்கும் தகவல்படி இந்தப் படமானது ரவுடி மயிலை சிவாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

யார் இந்த மயிலை சிவா?: மயிலை சிவா என்ற ரவுடி சென்னையில் பல குற்ற செயல்களில் ஈடுபட்டவர். செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு குடியேறிய சிவா; பீக்கில் இருந்த ரவுடி மயிலை மகேஷை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அவரை போன்றே ரவுடி ஆக வேண்டும் என்று தனது வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டவர். ஒரு சூழ்நிலையில் மகேஷின் உறவுக்கார பெண் மீது சிவா தாக்குதல் நடத்த; மகேஷ் Vs சிவா என்ற நிலைமை உருவானது. சிவாவை தீர்த்துக்கட்ட மகேஷ் முடிவு செய்து தனது உறவினர் மற்றும் உறவினரின் நண்பரை வைத்து ஸ்கெட்ச் போட்டு சிவாவின் கழுத்தை அறுத்துவிடுகிறார். ஆனால் ஆயுள் கெட்டியான சிவா அந்த கொலை முயற்சியில் உயிர் பிழைக்கிறார்.

பழி வாங்கிய சிவா: உயிர் பிழைத்த அவர்; தன்னை கொல்ல வந்தவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஒரே இரவில் அவர்கள் இரண்டு பேரையும் கொலை செய்தார். அப்போதுதான் சாதாரண சிவா மயிலை சிவாவாக மாறினார். இதனால் காண்டான மயிலை மகேஷ் சிவாவை தீர்த்துகட்டியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டு தினேஷ் என்ற ரவுடியின் உதவியை நாடினார். ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக தினேஷும், சிவாவும் ஏற்கனவே நெருங்கிய நண்பர்கள். எனவே இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மயிலை மகேஷை கொலை செய்துவிட்டார்கள். அன்றிலிருந்து தென் சென்னையின் பெரிய ரவுடியாக மாறிவிட்டார் மயிலை சிவா என்கிற டைகர் சிவா.

வெற்றிமாறனுக்கு பழக்கம்: இப்படித்தான் மயிலை சிவா தனக்கான சாம்ராஜ்ஜியத்தை தென் சென்னையில் எழுப்பினார். இது ஒருபக்கம் இருக்க; அவருடன் வெற்றிமாறன் பழகியும், அவரது அனுபவங்களை கேட்டு தெரிந்துகொண்டும்தான் வடசென்னை படத்தை இயக்கினார் என்றும்; இப்போது மயிலை சிவாவின் வாழ்க்கையை தழுவி அரசன் படத்தை எடுக்கிறார்; ப்ரோமோவில் சிம்புவின் கெட் அப் அப்படியே மயிலை சிவாவின் தோற்றத்துடன் ஒத்துப்போகிறது என்றும் பலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X