»   »  "விசாரணை"யில் தனுஷ் நடித்திருந்தால் படம் "பப்பரப்பா"வாகியிருக்கும்... வெற்றிமாறன்

"விசாரணை"யில் தனுஷ் நடித்திருந்தால் படம் "பப்பரப்பா"வாகியிருக்கும்... வெற்றிமாறன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பெரிய நடிகர் விசாரணையில் நடித்திருந்தால் வெற்றி இந்த அளவிற்கு சாத்தியமில்லை என்பதாலேயே தனுஷை இப்படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

விசாரணை படத்தின் தணிக்கை செய்யப்படாத திரையிடல் சென்னையில் நடந்தது. அதன் பின்னர் பேசிய அவர், " இப்படத்தில் தனுஷ் நடித்திருந்தால் நன்றாக தான் இருந்திருக்கும். ஆனால், அவர் நடித்திருந்தால் கண்டிப்பாக தோல்வி படமாக மாறியிருக்கும்.


Vetrimaran about Visaranai and Dhanush

தனுஷ் ஒரு பெரிய நடிகர். அவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த மாதிரி ஒரு பெரிய நடிகர் "விசாரணை" படத்தில் நடித்திருந்தால் இந்தளவிற்கு வரவேற்பு பெற்றிருக்காது.


அந்த ரசிகர்கள் எல்லாம் படம் பார்த்துவிட்டு என் மீது கோபமாகி இருப்பார்கள். ஆடுகளம் படமே இப்போது வெளியாகி இருந்தால் அவருடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது எனக்கு தெரியவில்லை.


Vetrimaran about Visaranai and Dhanush

பார்த்தவர்கள் அனைவருமே நன்றாக இருக்கின்றது என்றார்கள். ஒரு விவாதத்தை ஏற்படுத்தினார்கள். வெகுஜன மக்கள் போய் பார்க்கக்கூடிய படம் அல்ல விசாரணை. ஆனால் இந்த வரவேற்பிற்கே எனக்கு சந்தோஷம் தான்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Visaranai wont get this much views, if Dhanush act in this film, Vetrimaran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil