விஜய், ஷாருக்கான் கொடுக்காத வாய்ப்பு.. ஜூனியர் என்டிஆர் படத்தை தட்டித் தூக்கிய வெற்றிமாறன்?

சென்னை: தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர் என பெயரெடுத்துள்ள வெற்றிமாறன் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷின் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தொடர்ந்து தனுஷ் உடன் ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தேசிய விருதுகளையும் அள்ளி உள்ளார்.

விஜய்சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி முடித்துள்ள வெற்றிமாறன் அடுத்து வாடிவாசல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் உடன் செம காம்போ

தனுஷ் உடன் செம காம்போ

தனுஷின் பொல்லாதவன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான நிலையில், முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியையும் தன்னைப் பற்றி பேச வைத்து விட்டார் வெற்றிமாறன். நடிகர் தனுஷுக்கு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் என்றும் இவர்களின் காம்போ ஹிட் காம்போ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொட்டதெல்லாம் வெற்றி தான்.

விடுதலை ரெடி

விடுதலை ரெடி

நடிகர் தனுஷை தவிர்த்து அட்டகத்தி தினேஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படமும் தேசிய விருதை பெற்றது. மீண்டும் தனுஷ் இல்லாமல் விஜய்சேதுபதி மற்றும் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது.

ஷாருக்கானை சந்தித்து

ஷாருக்கானை சந்தித்து

2018ல் ஜீரோ படம் தோல்வியடைந்த நிலையில், தென்னிந்திய இயக்குநர்களை வைத்து ஒரு படத்தை இயக்க ஷாருக்கான் முடிவு செய்தார். வெற்றிமாறனின் அசுரன் திரைப்படம் அவருக்கு ரொம்பவே பிடித்திருந்த நிலையில், வெற்றிமாறனை அழைத்து கதை கேட்டார். ஆனால், கடைசியில் அட்லீ படத்துக்கு டிக் செய்து விட்டு ஜவான் படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான்.

விஜய்யை இயக்க ஆசை

விஜய்யை இயக்க ஆசை

இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடிகர் விஜய்யை வைத்தும் ஒரு படம் இயக்க ஆசை. நீண்ட காலமாகவே விஜய் படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அவருக்கு இன்னமும் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த முயற்சியின் பலனாகத்தான் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தில் கமிட் ஆனார். சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் வாடிவாசல் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓகே சொன்ன ஜூனியர் என்டிஆர்

ஓகே சொன்ன ஜூனியர் என்டிஆர்

ஆர்ஆர்ஆர் படம் மூலம் ஆஸ்கர் வரை ஜூனியர் என்டிஆரின் புகழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவி உள்ள நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் ஜூனியர் என்டிஆரை சந்தித்து மூன்று கதைகள் சொல்லி இருக்கிறாராம். அதில், ஒரு கதையை ஜூனியர் என்டிஆர் ஓகே செய்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி #Vetrimaaran ஹாஷ்டேக்கே டிரெண்டாகி வருகிறது.

அசுரன் ரொம்ப பிடிக்கும்

அசுரன் ரொம்ப பிடிக்கும்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறனின் இயக்கம் பற்றியும் அவர் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் ரொம்பவே தனக்கு பிடிக்கும் என்றும் பேசிய வீடியோக்களையும் ரசிகர்கள் #Vetrimaaran ஹாஷ்டேக்கில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

புஷ்பா தயாரிப்பு நிறுவனம்

புஷ்பா தயாரிப்பு நிறுவனம்

சினிமாவில் 1000 கோடிக்கும் மேல் முதலீடு செய்து வரும் புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் ஷங்கர் ராம்சரண் படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்து வெற்றிமாறன் ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்கப் போகிறார் என கூறுகின்றனர். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X