சூர்யா இப்போ என்ன பண்ணிட்டு இருக்கார்...வெற்றிமாறன் சொன்ன வாடிவாசல் சீக்ரெட்

சென்னை : தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும், எதிர்பார்க்கப்படும் டைரக்டர்களில் ஒருவர் வெற்றிமாறன். அதே போல் தனது ஒவ்வொரு படத்தின் மீதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியவர் நடிகர் சூர்யா.

Recommended Video

Mass Entry கொடுக்க காத்திருக்கும் Vaadivasal.Update எப்போ தெரியுமா ? *Kollywood | Filmibeat Tamil

இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண போகிறார்கள் என்றதுமே அனைவருக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. அதுவும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட படம் என சொல்லி விட்டு, அதற்கு வாடிவாசல் என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்ததால் ரசிகர்கள் கொண்டாட துவங்கி விட்டனர்.

இந்த படம் எப்போது வரும் என ஷுட்டிங் துவங்கப்படுவதற்கு முன்பே அனைவரும் கேட்க துவங்கி விட்டனர் . ஆனால் அறிவிப்பு வெளியிட்டு பல மாதங்கள் ஆன நிலையில் இதுவரை ஷுட்டிங் துவங்கப்படவில்லை.

தள்ளிப் போகும் வாடிவாசல் ஷுட்டிங்

தள்ளிப் போகும் வாடிவாசல் ஷுட்டிங்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது மட்டும் தான் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவலாக உள்ளது. வாடிவாசல் படத்தின் ஷுட்டிங் ஜுலை மாதம் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக சமீபத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் டெஸ்ட் ஷுட் நடத்தப்பட்டது. இந்த போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டாகின.

 அப்போ அப்படி சொன்னாங்களே

அப்போ அப்படி சொன்னாங்களே

வாடிவாசல் படத்திற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்காட்டு காளைகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, அவற்றில் இருந்து இரண்டு காளைகள் தேர்வு செய்யப்பட்டதாகவும், இந்த காளைகள் படம் முழுவதும் சூர்யாவுடன் நடிக்க உள்ளதால் அவற்றுடன் சூர்யா பயிற்சி எடுத்து வருகிறார் என கூறப்பட்டது. இதற்கு ஏற்றாற் போல் சூர்யாவும் அடிக்கடி காளைகளை பிடித்துக் கொண்டு வாக்கிங் செல்வது போன்ற போட்டோக்கள் வெளியாகி வருகின்றன.

சூர்யா இதுதான் பண்ணிட்டு இருக்காரா

சூர்யா இதுதான் பண்ணிட்டு இருக்காரா

ஆனால் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் வாடிவாசல் அப்டேட் கேட்கப்பட்டது. அப்போது பேசிய வெற்றிமாறன், இது ரொம்ப ஆரம்ப நிலையில் தான் உள்ளது. சோதனை முயற்சியாக தான் சமீபத்தில் டெஸ்ட் ஷுட் நடத்தினோம். சூர்யா, ஒரு நாட்டு காளை மாடு மற்றும் ஒரு காங்கேயம் காளை மாட்டை வாங்கி வீட்டிலேயே வளர்த்து வருகிறார். இவைகள் தான் படத்தில் சூர்யாவுடன் நடிக்க உள்ளன. இந்த காளைகள் சூர்யாவின் வீட்டில் அவருடன் தான் உள்ளன. அதோடு மாடு பிடி வீரர்களுடன் அவர் அடிக்கடி பேசி, மாடுபிடிப்பது பற்றிய நுணுக்கங்களை கேட்டு பயிற்சி பெற்று வருகிறார் என்றார்.

தாமதத்திற்கு இதுதான் காரணமா

தாமதத்திற்கு இதுதான் காரணமா

வாடிவாசல் ஆரம்ப நிலையிலேயே இருப்பதை வெற்றிமாறனே ஓப்பனாக சொல்லி உள்ளார். வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரியை வைத்து இயக்கி வரும் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், அதன் வேலைகளை முடித்த பிறகு வாடிவாசல் படத்தின் வேலைகளை ஆரம்பிக்க போகிறாராம். அதோடு, சூர்யா காளைகளுடன் பழகி, பயிற்சி எடுக்க சிறிது காலம் தேவைப்படுகிறதாம். இதனால் தான் வாடிவாசல் ஷுட்டிங் தள்ளி போகிறதாம்.

வாடிவாசலுக்கு முன் மற்றொரு படமா

வாடிவாசலுக்கு முன் மற்றொரு படமா

வாடிவாசல் படத்தின் ஷுட்டிங் தள்ளி போவதால் அதற்கு முன் மற்றொரு படத்தில் நடித்து முடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் சூர்யா 41 படத்தை முடித்த பிறகு வேறு ஒரு டைரக்டர்களின் கதையில் நடித்து விட்டு தான் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 சூர்யா பிறந்தநாள் ட்ரீட் காத்திருக்கா

சூர்யா பிறந்தநாள் ட்ரீட் காத்திருக்கா

மற்றொரு தகவலாக சூர்யாவின் பிறந்தநாள் ஜுலை 22 ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், அன்று வாடிவாசல், சூர்யா 41, விக்ரம் 3 படங்கள் பற்றிய முக்கிய அறிவிப்புக்கள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் ஷுட்டின் போது எடுக்கப்பட்ட ஷாட்களை வைத்து க்ளிம்ப்ஸ் ஒன்றை வெளியிட வாடிவாசல் டீம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X