»   »  தனுஷால் 'வடசென்னையை'த் தள்ளிவைத்து புதிய படத்தைக் கையிலெடுக்கும் வெற்றிமாறன்?

தனுஷால் 'வடசென்னையை'த் தள்ளிவைத்து புதிய படத்தைக் கையிலெடுக்கும் வெற்றிமாறன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் கால்ஷீட் சொதப்பல்களால் வடசென்னைக்கு முன்னால் ஒரு புதிய படத்தை இயக்க, வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்' என தனுஷை வைத்து 2 வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் வெற்றிமாறன்.


சமீபத்தில் இவர் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது.


வடசென்னை

வடசென்னை

'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படங்களைத் தொடர்ந்து தனுஷை வைத்து 'வட சென்னை' படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. சமந்தா, ஆண்ட்ரியா என 2 நாயகிகள் தனுஷின் ஜோடியாக நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் தனுஷ்-வெற்றிமாறன் இருவருமே இதனை உறுதி செய்தனர்.


லைகா நிறுவனம்

லைகா நிறுவனம்

2 பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. சென்னையில் வாழ்ந்த உண்மையான ரவுடி ஒருவனின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு இப்படத்தை எடுக்கப்போவதாக வெற்றிமாறன் கூற, ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.


கவுதம் மேனன்

கவுதம் மேனன்

'கொடி', 'தொடரி' படங்களுக்குப்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவுதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம், ஹாலிவுட் படம் என்று மற்றவர்களின் படங்களுக்கே தனுஷ் முன்னுரிமை கொடுத்து வருகிறார்.


புதிய படம்

புதிய படம்

இதனால் முற்றிலும் புதுமுகங்களை வைத்து குறுகிய காலப்படமொன்றை, வெற்றிமாறன் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பை காரைக்குடி பகுதிகளில் நடத்தி 2 மாதங்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட வெற்றிமாறன் திட்டமிட்டு இருக்கிறாராம். இதனால் 'வடசென்னை' திட்டமிட்டபடி தொடங்கப்படுமா? இல்லை கைவிடப்படுமா? என்னும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


English summary
Sources Said Vetri Maran start New movie Before Vada Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil