கமலுடன் செம ரொமான்ஸ் செய்த வேட்டையாடு விளையாடு நடிகை நடிப்பதை நிறுத்த இதுவா காரணம்.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தின் பிளாஷ் பேக்கில் கமல் ஹாசனின் மனைவியாக நடித்திருப்பார் கமலினி முகர்ஜி. கமலுக்கும் இவருக்குமான ரொமண்டிக் பாடலான பார்த்த முதல் நாளே பாடலுக்கு எப்போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருப்பார்கள். அந்த அளவுக்கு அந்த பாடல் அவருக்கு புகழ் பெற்றுக் கொடுத்தது. இப்படி இருக்கும்போது திறமையான நடிகையான கமலினி முகர்ஜி சினிமாவில் நடிப்பதை கை விட முக்கிய காரணமே சினிமா உலகம் தான் என்று கூறியுள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தனது திரைப்பயணத்தை நடிகையாக தொடங்கியவர் கமலினி முகர்ஜி. திறமையான நடிகை, தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடித்து வருவார். தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க கூடுமானவரை முயற்சிப்பார். திரையுலகில் பல நடிகைகள் நடிகர்களின் நடிகைகளாக இருக்கும் போது, கமலினி முகர்ஜி இயக்குநர்களின் நடிகை என பெயர் வாங்கிய வெகு சில நடிகைகளில் ஒருவர்.

வெட்கம்: இவர் கடைசியாக தெலுங்கில் ராம் லீலா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் நடித்த போது தான் நடித்த காட்சிகளை பார்த்தபோது, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாதது போல உணர்ந்ததாகவும். அது வெட்கமாக இருந்தது என்றும், அதனால்தான் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விடலாம் என்று முடிவு எடுத்ததாகவும் கூறினார். அதனால்தான் தெலுங்கு படங்களை விட்டுவிட்டு மற்ற மொழிப் படங்களில் நடித்ததாகவும் அவர் கூறினார்.
காரணம்: இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் புலி முருகன் படத்தில் மோகன் லால்க்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் அவர் படங்களில் நடிக்கவில்லை. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் கூறியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நாம் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறோம். ஒரு காட்சிக்கு என்ன உணர்வை ரசிகர்களுக்கு கடத்த வேண்டுமோ, அதை மனதில் வைத்து மெனக்கெட்டு நடித்திருப்போம். ஆனால் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள். அந்த காட்சியை நீக்கி விட்டதாக கூட இயக்குநர்கள் நம்மிடத்தில் முறையாக தெரிவிக்க மாட்டார்கள். இப்படியான காரணங்களினால்தான் நான் நடிப்பதை கைவிட்டு விடலாம் என்று முடிவெடுத்ததாக கூறினார். இவரது இந்த பதில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தற்போதைய கவனம்: மேலும் அவர், இளம் வயதில் படிப்பின் மீது கவனம் செலுத்தி வந்தேன். அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தினேன். தற்போது குடும்பம் ஆகிவிட்டது. குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்து வருகிறேன் என்றும் தெரிவித்தார். இவரது இந்த பேச்சு திரைத்துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே நடிகை சாய் பல்லவி தமிழில் ஒரு படத்தில் மெனக்கெட்டு நடித்த காட்சிகளை படத்தில் சேர்க்காமல் நீக்கிவிட்டதாக மனவருத்தம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











