விடுதலை ரிலீசிற்கு இப்படி ஒரு பிளானா?...வெற்றிமாறன் ஏன் இந்த முடிவுக்கு வந்தார்?

சென்னை : டைரக்டர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சூரி காம்போவில் உருவாகும் விடுதலை படத்தின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

Recommended Video

Thiruchitrambalam | Kutty Story சொன்ன Dhanush, Audio launch சுவாரஸ்யம்! *Kollywood

2019 ம் ஆண்டே இந்த படத்தின் வேலைகளை துவங்கி, 2021 ம் ஆண்டே படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டினார் வெற்றிமாறன். இதில் சூரி போலீஸ் உடையிலும், விஜய் சேதுபதி கை விலங்குடனும் இருக்கும் காட்சிகள் தான் அனைவரின் ஆர்வத்தை அதிகரிக்க செய்தது.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை மையமாக வைத்து வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கி வருகிறார். விடுதலை படத்தை முடித்த பிறகு, சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் துவக்குவார் என சொல்லப்பட்டது.

விரைவில் விடுதலை ரிலீஸ்

விரைவில் விடுதலை ரிலீஸ்

தற்போது இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்திற்கான பணிகள் முழுவதுமாக முடிந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகமும் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

இரண்டாம் பாகமும் ரெடி

இரண்டாம் பாகமும் ரெடி

தற்போது இரண்டாம் பாகத்திற்கான சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், டைரக்டர் ராஜீவ் மேனன் மிக முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மிக குறுகிய இடைவெளியில் இரண்டு பாகங்களும் வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது.

ரிலீசிற்கு இப்படி ஒரு பிளானா

ரிலீசிற்கு இப்படி ஒரு பிளானா

லேட்டஸ்ட் தகவலாக, விடுதலை படத்தின் முதல் பாக ரிலீசிற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே துவங்கி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யலாம் என படக்குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஏன் இந்த முடிவை எடுத்தார்

ஏன் இந்த முடிவை எடுத்தார்

சமீபத்தில் தான் வெற்றிமாறன், காரணம் ஏதும் இல்லாமல் தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்தார். இதுவே ஏன் என புரியாமல் ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கையில், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் விடுதலை படத்தை எதற்காக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.

இது தான் காரணமா

இது தான் காரணமா

நாவல் கதைகளை சினிமாவாக்கி வெற்றி காண்பதில் கைதேர்ந்தவர் வெற்றிமாறன். அவரது படம் என்றாலே எப்போதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இவரது படத்தை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் சமயத்தில் எதற்காக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய போகிறார்? சென்சார் பிரச்சனை காரணமாக இருக்குமோ என பலரும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X