»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை விசித்ரா கேரளாவைச் சேர்ந்த ஹோட்டல் மேலாளரைத் திடீர் திருமணம் செய்து கொண்டார்.

தலைவாசல் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளவர் விசித்ரா. மடிப்பு அம்சா என்ற கேரக்டரில்முதல் படத்தில் அறிமுகமானதால் அவருக்கு அப்பெயர் நிலைத்து விட்டது.

தமிழ் உள்பட பல மொழிப் படங்களில் நடித்து வரும் விசித்ரா, ஷூட்டிங்குக்காக அடிக்கடி கேரளா போகும்வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில், மலம்புழாவிலுள்ள ஒரு ஹோட்டலில் மேலாளராக உள்ள ஷாஜிஎன்பவருக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்தக் காதல் தற்போது கல்யாணத்தில் முடிந்துள்ளது.

இருவரது காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைக்காததால் அவர்கள் ரகசியத் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்தனர். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் வைத்து வியாழக்கிழமைகாலை 10 மணிக்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மலம்புழாவில் ஒருறை ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதுதான் விசித்ராவுக்கும், ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன்என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விஜயன், விசித்ராவைக் கற்பழிக்க முயன்றதாக விசித்ரா புகார்தெரிவித்து பரபரப்பூட்டினார். அந்த சம்பவத்தின்போது விசித்ராவை விஜயனிடமிருந்து ஷாஜிதான்காப்பாற்றியதாகத் தெரிகிறது. அந்த சம்பவத்திற்குப் பிறகு ஷாஜி மீது விசித்ராவுக்குக் காதல் பிறந்ததாம்.

Read more about: chennai, cinema, hotel, tamilnadu, vicitra
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil