Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சோனி லைவில் வெளியானது விக்டிம் ஆந்தாலஜி.. வெங்கட்பிரபு, பா ரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன் மாயாஜாலம்!
சென்னை : இயக்குநர்கள் வெங்கட்பிரபு, பா ரஞ்சித், எம் ராஜேஷ் சிம்புதேவன் ஆகியோர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது விக்டிம் ஆந்தாலஜி.
சோனி லைவில் இன்றைய தினம் இந்த ஆந்தாலஜி வெளியாகியுள்ளது. இந்தக் கதைகளங்கள் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளன.
இதில் அமலா பால், நாசர், நட்டி நட்ராஜ், பிரியா பவானி சங்கர், பிரசன்னா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
ரெட்ரோ
ஸ்டைலில்
மஞ்சக்
காட்டு
மைனாவாக
ஐஸ்வர்யா
ராஜேஷ்:
தெறிக்கவிடும்
டிரைவர்
ஜமுனா
Cool
Dude
சாங்!

விக்டிம் ஆந்தாலஜி படம்
இயக்குநர்கள் பா ரஞ்சித், வெங்கட் பிரபு, சிம்புதேவன், எம் ராஜேஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆந்தாலஜி படம் விக்டிம். இந்தப் படத்தை பிளாக் டிக்கெட் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆக்சஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சிறப்பான நடிகர்கள்
இந்தப் படத்தில் அமலா பால், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், பிரசன்னா, தம்பி ராமையா, கலையரசன், நாசர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதைக்களமும் சிறப்பான அனுபவங்களை ரசிகர்களுக்கு தரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பா ரஞ்சித்தின் தம்மம்
இதில் பா ரஞ்சித் தம்மம் என்ற கதையையும் வெங்கட்பிரபு கன்ஃபெஷன் என்ற கதையையும் சிம்புதேவன் கொட்டை பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும் என்ற கதையையும் எம் சிம்புதேவன் மிரேஜ் என்ற கதையையும் இயக்கியுள்ளனர். அவரவர் பாணிகளில் இவர்கள் இந்த கதைகளை இயக்கியுள்ளனர்.

சோனி லைவில் வெளியீடு
விக்டிம் என்ற இந்த ஆந்தாலஜி படம் இன்றைய தினம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் பா ரஞ்சித் இயக்கியுள்ள தம்மம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதில் விவசாயியாக நடித்துள்ள குரு சோமசுந்தரத்தில் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.

எம் ராஜேஷ் இயக்கத்தில் மிர்ரேஜ்
அடுத்ததாக எம் ராஜேஷ் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள மிரேஜ் படம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து வேலை விஷயமாக சென்னை வரும் பிரியா பவானி சங்கர், நிறுவனம் கொடுக்கும் வீட்டில் தனியாக தங்குகிறார் அவர் அங்கு சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தக் கதை கொடுக்கப்பட்டுள்ளது.

கொட்டை பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்
அடுத்ததாக சிம்புதேவனின் கொட்டை பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும் கதையில் நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கோவிட் சூழலை மையமாக கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நாசர் மற்றும் சிம்பு தேவன் என சிறந்த நடிகர்கள் இருந்த போதிலும் இந்தக் கதையும் ரசிகர்களை கவரத் தவறியுள்ளது.

வெங்கட்பிரபுவின் கன்ஃபெஷன்
அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கன்ஃபெஷன் கதைக்களமும் சிறப்பான திரைக்கதையை கொடுக்கத் தவறியுள்ளது. இதில் அமலா பால் மற்றும் பிரசன்னா லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2002ல் வெளியான போன் பூத் படத்தை தழுவி இந்தப் படத்தை இயக்குநர் எடுத்துள்ளார். ஆனால் இந்தப் படமும் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடையே பெறவில்லை.

ரசிகர்களை கவர்ந்த பா ரஞ்சித்
இந்த 4 கதைகளில் பா ரஞ்சித்தே ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார். அவரது தம்மம் கதைக்களம் ஒரு அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான நிகழ்வுகளை சிறப்பாக காட்சிப் படுத்தியுள்ளது. இந்தக் கதையில் ஒரு விவசாயியின் வலியை, அழகான விவசாய நிலங்களை சிறப்பாக வெளிக் கொண்டு வந்துள்ளார் ரஞ்சித்.
ரசிகர்களை கவர்ந்த ஆந்தாலஜி
மொத்தத்தில் ரசிகர்களை கவரும் வகையில் விக்டிம் ஆந்தாலஜி அமைந்துள்ளது. பா ரஞ்சித் அதிகமான கவனத்தை பெற்ற போதிலும், மற்றவர்களும் ரசிகர்களை கவர தவறவில்லை. திரைக்கதையில் அவர்கள் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.