யப்பா...பட்டையை கிளப்புறாங்களே...லைக்குகளை அள்ளி குவிக்கும் விக்டிம் டிரைலர்

சென்னை : கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. இவற்றில் சினிமாவை தாண்டி அனைத்து தளங்களும் வெப் சீரிஸ்களை போட்டி போட்டு கொண்டு அதிகம் வெளியிட்டு வருகின்றன.

சினிமாக்களை மிஞ்சும் அளவிற்கு செம த்ரில்லிங், விறுவிறுப்பு நிறைந்த வெப்சீரிஸ்கள் பலவும் சமீப காலமாக வெளிவர துவங்கி விட்டன. ஆரம்பத்தில் இந்தியில் மட்டுமே அதிகம் வந்த வெப்சீரிஸ்கள் தற்போது அனைத்து மொழிகளிலும் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் தமிழில் வந்த வெப்சீரிசான சுழல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பாராட்டுக்களை அள்ளி குவித்தது. இதன் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Victim - Who is Next

Victim - Who is Next

இந்நிலையில் ரசிகர்களை கவர்வதற்காக சினிமாவை போலவே வெப் சீரிஸ்களுக்கும் டிரைலர்கள் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள Victim - Who is Next வெப்சீரிசின் டிரைலர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

யாரெல்லாம் நடிச்சிருக்காங்க

யாரெல்லாம் நடிச்சிருக்காங்க

தமிழில் உருவாக்கப்பட்டுள்ள ஆந்திராலஜி தான் Victim - Who is Next. நான்கு டைரக்டர்கள், நான்கு கதைகள் என உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிசின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பிரசன்னா, அமலா பால், பிரியா பவானிசங்கர், நட்டி நடராஜ், தம்பி ராமைய்யா, நாசர், கலையரசன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

யார் அந்த 4 டைரக்டர்கள்

யார் அந்த 4 டைரக்டர்கள்

வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ், சிம்பு தேவன் ஆகியோர் இயக்கி உள்ள இந்த ஆந்திராலஜியை பிளாக் டிக்கெட் ப்ரொடக்ஷன்ஸ் உடன இணைந்து ஆக்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளது. செம த்ரில்லிங்காக எடுக்கப்பட்டுள்ள இந்த ஆந்திராலஜி சோனி லைவ் தளத்தில் ஆகஸ்ட் 5 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

டிரைலரே மிரட்டுதே

டிரைலரே மிரட்டுதே

தனியாக இருக்கும் பிரியா பவானிசங்கரை ஒரு உருவம் துரத்துவது, பிரசன்னாவின் மிரட்டலால் பயந்து நடுங்கும் அமலா பால், விவசாயியாக வரும் குரு சோமசுந்தரம், மர்ம புத்தகம் ஒன்றை படிக்கும் தம்பி ராமையா முன், அந்த புத்தகத்தில் இருக்கும் ஒரு கேரக்டரான நாசர் நேரில் வருவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. யார் இவர்கள், என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை ரசிகர்கள் மனதில் அதிகப்படுத்தி உள்ளது இந்த டிரைலர்.

Recommended Video

Cinematographer Arthur A. Wilson |Parthiban சினிமாவை Next Level கொண்டு செல்கிறார் | *Interview
இரண்டுமே சோனி லைவில்

இரண்டுமே சோனி லைவில்

சமீபத்தில் அருண் விஜய் நடித்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிசின் டிரைலர் வெளியிடப்பட்டு, ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது விக்டிம் டிரைலர் கவர்ந்துள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த இரு த்ரில்லிங் வெப் சீரிஸ்களும் சோனி லைவ் தளத்தில் தான் வெளியாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X