நேற்று வந்த இயக்குநர் இப்படி பண்றாரே.. வனிதா விஜயகுமாருக்கு நேர்ந்த அவமானம்.. என்ன இப்படி ஆகிப்போச்சு?

சென்னை: விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா 90களில் சினிமாவில் ஹீரோயினாக நடித்தவர். விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் எல்லாம் நடித்தார். பிறகு திடீரென அவர் திருமணமாகி செட்டிலானார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை நல்லபடியாக போகவில்லை. அதிலிருந்து வெளியே வந்து சில திருமணங்கள் செய்துகொண்ட அவருக்கு அதுவும் சரியாக அமையவில்லை. இப்போது சிங்கிளாக இருக்கும் அவர் Mrs&Mr என்ற படத்தையும் இயக்கினார்.

மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமாருக்கும், நடிகை மஞ்சுளாவுக்கும் பிறந்தவர் வனிதா விஜயகுமார். தந்தை, தாய் வழியிலேயே சினிமாவில் நடித்த அவருக்கு பெரிய ஹிட் எதுவும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள். ஆனால் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார்.

தொடர் திருமணங்கள்: அந்தத் திருமண முறிவுக்கு பிறகு சில வருடங்கள் சிங்கிளாக இருந்த அவர்; அடுத்தடுத்து திருமணங்கள் செய்தார். எந்தத் திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. அதேபோல் தனது குடும்பத்தினரிடமும் மோதல் போக்கையே கடைபிடித்தார் அவர். திரைத்துறையிலிருந்து சிலர் அந்தக் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னையை சரி செய்ய முயன்றாலும்; அந்த முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Video of director Ashwath Marimuthu humiliating Vanitha Vijayakumar goes viral
Photo Credit:

பிக்பாஸ் வனிதா: சண்டைகள், சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அங்கும் தனது அதிரடி நடவடிக்கைகளால் கவனத்தை ஈர்த்தவரால்; டைட்டிலை மட்டும் வெல்ல முடியவில்லை. இருப்பினும் அவர் எதிர்பார்த்த பிரபல்யம் கிடைத்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அநீதி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான ரோலை அவர் ஏற்று நடிக்கவும் செய்தார். இதற்கிடையே அவரது மகள் ஜோவிகாவும் பிக்பாஸில் கலந்துகொண்டு தாய் வழியில் அதிரடி காண்பித்தார்.

இயக்குநர் வனிதா: சூழல் இப்படி இருக்க ராபர்ட் மாஸ்டரை ஹீரோவாக வைத்தும் தான் ஹீரோயினாக நடித்தும் Mrs&Mr என்ற படத்தை இயக்கினார் வனிதா. சில மாதங்களுக்கு முன்பு தியேட்டர்களில் ரிலீஸானது. ஜோவிகாதான் படத்தை தயாரித்திருந்தார். எதிர்பார்த்தபடியே படம் படு க்ரிஞ்சாகவும், ஆபாசமாகவும் இருந்ததாக படம் பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். அதுமட்டுமின்றி எந்த ஓடிடி நிறுவனமும் அந்தப் படத்தை வாங்குவதற்கு முன்வரவில்லை. எனவே யூடியூபிலேயே வெளியிட்டார்.

கண்டுகொள்ளாத இயக்குநர்: அப்படத்தின் தோல்வி வனிதாவுக்கு சில பொருளாதார சிக்கல்களையும் உண்டு செய்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் வாசனை திரவிய கடை ஒன்று திறக்கப்பட்டது. அதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். வனிதாவும் வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர் அந்த கடையை விட்டு வெளியே வரும்போது அவருக்கு எதிரில் டிராகன் திரைப்பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வந்தார். அவரோ, வனிதாவை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. அதேசமயம் வனிதாவின் அருகே வந்துகொண்டிருந்த மக்கள் தொடர்பாளர் ஒருவரை பார்த்து நலம் விசாரித்தார். இந்த வீடியோ பயங்கரமாக இப்போது ட்ரெண்டாகிவிட்டது. மேலும் வனிதா விஜயகுமாருக்கு இப்படி ஒரு அவமானமா என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸையும் பறக்கவிடுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X