மிஷ்கினுக்கு இல்லை End Card.. சூப்பர் சிங்கரில் மிஷ்கின் என்ன செஞ்சிருக்காரு பாருங்க.. அலப்பறையை கூட்டுறாரு

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் மிஷ்கின். அவர் இப்போது விஜய் சேதுபதியை வைத்து ட்ரெய்ன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஒருபக்கம் டைரக்‌ஷன் மற்றும் நடிப்பில் பிஸியாக இருக்கும் அவர்; இப்போது சூப்பர் சிங்கரில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். அவர் ஜட்ஜ்ஜாக வந்திருப்பது அந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை மேற்கொண்டு கூட்டியிருக்கிறது.

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின் தொடர்ந்து இயக்கிய அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட படங்கள் சூப்பர் வரவேற்பை பெற்றன. அதிலும் பிசாசு படத்தை பார்த்து, பேயைக்கூட தேவதையாக காண்பித்திருக்கிறாரே என்று உச்சிமுகர்ந்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். அவரது ஸ்டைல் ஆஃப் ஃபிலிம் மேக்கிங் வித்தியாசமாக இருந்ததாலும் அவர் லெஜண்ட் இயக்குநர்கள் வரிசையில் சேர்க்கப்பட்டார்.

இப்போதைய படம்: அவர் இயக்கியிருக்கும் பிசாசு படத்தின் இரண்டாவது பாகம் இன்னும் வெளியாகவில்லை. அது வெளியானால் கண்டிப்பாக படத்துடைய முதல் பாகம் போலவே கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜய் சேதுபதியை வைத்து கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் ட்ரெய்ன் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். விரைவில் படம் வெளியாகவுள்ளது.

நடிகராகவும் கலக்கும் மிஷ்கின்: இயக்கம் ஒருபக்கம் இருக்க நடிப்பிலும் பிஸியாகியிருக்கிறார். நந்தலாலா படத்தின் மூலமே ஹீரோவாக அறிமுகமாகியிருந்தாலும்; அவ்வப்போது மட்டுமே நடித்துவந்தார். சமீபமாக அவர் முழுநேர நடிகராக மாறியிருக்கிறார். லியோ, மாவீரன், ட்ராகன் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு அதிக அளவு கொண்டாடப்பட்டது. இயக்கத்தில் எப்படி முத்திரை பதித்தாரோ அதேபோல் நடிப்பிலும் பதித்துவருகிறார்.

video of Mysskin dancing on Vijay Tv s Airtel Super Singer 11 has gone Trending
Photo Credit:

சர்ச்சைகள் அதிகம்: எந்த அளவுக்கு இன்டஸ்ட்ரியில் ஃபேமஸாகியிருக்கிறாரோ அதேபோல் சர்ச்சையாக பேசியும் மாட்டிக்கொள்பவர் அவர். பாட்டல் ராதா படத்தின் விழாவில்; குடியை பற்றி பேசியது பெரும் பிரச்னையாக மாறியது. அதனையடுத்து மேடையில் வைத்து பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் மிஷ்கின் பேசியதற்கு சமுத்திரகனி உள்ளிட்டோர் சப்போட்டும் செய்திருந்தார்கள்.

இப்போதைய அவதாரம்: இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல ஏரியாக்களில் கலக்கும் மிஷ்கின் இப்போது சின்னத்திரைக்கும் வந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 11வது சீசனில் நடுவராக பொறுப்பேற்றிருக்கிறார். அவர் ஜட்ஜ்ஜாக வந்திருப்பது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகிறது. எந்த ஈகோவும் இல்லாமல் போட்டியாளர்களுடன் உரிமையாக பேசும் மிஷ்கின் செய்த செயல் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

செம டான்ஸ்: அதாவது போட்டியாளர்களில் ஒருவர் மிஷ்கின் தனக்கு முத்தம் கொடுக்கவில்லை என்று பாடலாக பாடினார். உடனே நடுவர் இருக்கைக்கு அந்தப் போட்டியாளரை அழைத்த மிஷ்கின், அவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டு; முத்தம் கொடுத்தார். அதுமட்டுமின்றி தனது கைகளில் அணிந்திருந்த ஒரு பேண்டையும் கொடுத்தார். இதற்கு முன்னதாக இன்னொரு போட்டியாளருக்கு வாட்ச் கொடுத்தது; மற்ற இரண்டு போட்டியாளர்களை இசையமைப்பாளர், நடிகராக மாற்றுவேன் என சொன்னது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X