பொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரம் செய்த காரியத்தை பாருங்க

சென்னை : மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி, சோபிதா துலிபலா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, அஷ்வின் ககுமமா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர்.

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் அடிப்படையில் அதே பெயரில் பிரம்மாண்ட படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. வரலாற்று படமான இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷஸுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் தான் இந்த படத்தில் யார் யார் எந்தெந்த ரோலில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பாடல்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய்

இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய், சரத்குமார் நடிக்கும் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் ரோலில் தான் சரத்குமார் நடிக்கிறாராம். அவரது மனைவி நந்தினியாக, வில்லி ரோலில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாராம். இது தவிர மந்தாகினி வேடத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாராம்.

சோழ மன்னனாக விக்ரம்

சோழ மன்னனாக விக்ரம்

விக்ரம் தற்போது சியான் 60 படத்துடன், பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற சோழ மன்னர் ரோலில் தான் விக்ரம் நடிக்கிறாராம். இவர் 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்.

 கர்ணன் கேரக்டரை மறுத்த விக்ரம்

கர்ணன் கேரக்டரை மறுத்த விக்ரம்

பொன்னியின் செல்வன் படத்தில் சோழ மன்னர் கேரக்டரில் நடிப்பதால், மற்றொரு வரலாற்று படமான சூர்யபுத்திர கர்ணன் படத்தில் நடிக்க விக்ரம் மறுத்து விட்டார். மகாபாரதத்தில் கர்ணனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள சூர்யபுத்திர கர்ணன் படத்தின் கேரக்டரும், பொன்னியின் செல்வன் சோழ மன்னர் கேரக்டரும் கிட்டதட்ட ஒரே மாதிரி உள்ளதால் அந்த படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்ட பிறகு அதிலிருந்து விக்ரம் விலகினார்.

விக்ரமின் அன்சீன் வீடியோ

விக்ரமின் அன்சீன் வீடியோ

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இந்நிலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் விக்ரமின் அன்சீன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாள் சண்டையில் விக்ரம்

வாள் சண்டையில் விக்ரம்

அந்த வீடியோவில் விக்ரம், படத்திற்காக வாள் சண்டை பயிற்சி எடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த பயிற்சியின் போது நிஜ வாளுக்கு பதிலாக இரும்பு கம்பி ஒன்றை வைத்து பயிற்சி எடுத்துள்ளார். இதில் ஸ்டன்ட் மேன்கள் சிலர் விக்ரமிற்கு சண்டை பயிற்சி அளித்து வருகின்றனர்.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

ஒயிட் டி ஷர்ட், கருப்பு பேன்ட் அணிந்து விக்ரம் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சோழ மன்னராக விக்ரமை பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

புதுச்சேரியில் நடந்த ஷுட்டிங்

புதுச்சேரியில் நடந்த ஷுட்டிங்

ஆனால் இந்த வீடியோ புதுச்சேரியில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் படக்குழு புதுச்சேரியில் படப்பிடிப்பை முடித்தது. ஏற்கனவே புதுச்சேரி ஷுட்டிங்கை முடித்து விட்டு, தற்போது படக்குழுவினர் ஐதராபாத் சென்றுள்ளனர்.

2022 ல் படம் ரிலீஸ்

2022 ல் படம் ரிலீஸ்

விரைவில் முதல் பாகத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இரண்டாம் பாக வேலைகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் பாகத்தை 2022 ம் ஆண்டின் துவக்கத்திலும், அடுத்த பாகத்தை 2022 ம் ஆண்டின் மத்தியிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X