Bigg Boss 9 - பெண்கள் உள்ள வீடு.. பேண்ட்டை ஒழுங்கா போடுங்க பாஸ்.. எல்லை மீறும் வாட்டர் மெலன் ஸ்டார்

சென்னை: வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு அலப்பறைகளை கூட்டிவந்த திவாகர் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராக சென்றிருக்கிறார். போட்டி ஆரம்பித்து இரண்டு நாட்கள் மட்டுமே முடிவடைந்திருக்கும் நிலையில் அவரது நடத்தைகள் ஒவ்வொன்றுமே விமர்சனத்தை சந்திக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் அவரை நெட்டிசன்கள் வெளுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

மதுரையை சேர்ந்த திவாகர் என்பவர்; கஜினி படத்தில் சூர்யா நடித்த தர்பூசணி சீனை ரீ க்ரியேட் செய்கிறேன் என்கிற பெயரில் காமெடி செய்து வீடியோவாக வெளியிட்டார். அதனை பலரும் கிண்டல் செய்து தாளித்து எடுத்துவிட்டார்கள். ஆனால் அதனையே தனக்கான பிரபல்யமாக பார்த்து தொடர்ந்து அதேபோல் 3 தனுஷ், அந்நியன் விக்ரம், கர்ணன் சிவாஜி என சொல்லிக்கொண்டு காமெடிகளை செய்துவந்தார். அதையும் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள்.

எல்லை மீறிய திவாகர்: தொடர்ந்து அவர் அப்படி செய்துவந்த சூழலில்; சில தனியார் யூடியூப் சேனல்கள் அவரை அழைத்து பேட்டிகளும் எடுக்க ஆரம்பித்தன. கிடைத்தது சான்ஸ் என்ற தொனியில் அங்கும் வந்து தனது கோமாளித்தனத்தை செய்ய ஆரம்பித்தார். மேலும் சூரியைவிட தான் உயர்ந்தவன் என்ற தொனியிலும் அவர் பேசியது பெரும் கண்டனத்தை சம்பாதித்தது. அதன் பிறகு அவரை பேட்டி எடுக்கும் செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தன.

Video of Water Melon star Diwakar not wearing pants properly on Bigg Boss 9 goes viral
Photo Credit:

பிக்பாஸில் திவாகர்: யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். முதல் போட்டியாளராக வந்த அவரிடம், விஜய் சேதுபதி, 'மற்ற மேடைகள் போன்று இதனை பார்க்க வேண்டாம்' என பக்குவமாக கூறினார். அதையெல்லாம் நல்ல குழந்தை போல் கேட்டுவிட்டு; உங்கள் முன் ஒரு சீன் நடித்து காண்பிக்கலாமா என கேட்க; காண்டான சேது அதை வெளியில் காண்பிக்காமல் இப்போதானே சொன்னேன் என்று கூறி உள்ளே அனுப்பி வைத்தார்.

குறட்டையால் சண்டை: வீட்டுக்குள் சென்ற பிரவீன் காந்தியிடம் தன்னை பற்றி தற்பெருமையை பேச; அவரோ குட் குட் என்று சொல்லியபடி நகர்ந்தார். பிறகு குறட்டை விவகாரத்தில் பிரவீனுடன் மோதல் ஏற்பட்டது. மேலும் அரோராவை பார்த்து இரட்டை அர்த்தத்தில் பேசியது என தனது வேண்டாத வேலைகளை ஆரம்பித்துவிட்டார். நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்களிலேயே இப்படி செய்கிறாரே என்று ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினார்கள்.

பேண்ட்டை ஒழுங்கா போடுங்க: இந்நிலையில் புதிய விஷயத்தில் அவரை ரசிகர்கள் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது சட்டை போடாமல் வெறும் பேண்ட்டை அணிந்தபடி அகோரி கலையிடம், ஒரு சீனை நடித்து காண்பிக்கிறேன் என்கிற பெயரில் காமெடி செய்துகொண்டிருந்தார் திவாகர். அப்போது தனது பேண்ட்டைக்கூட ஒழுங்காக அணியவில்லை அவர். மேலும் ஜிப்பையும் அவர் சரியாக போட்டுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், பெண்கள் இருக்கும் வீட்டில் இப்படியா திரிவது; இவரை ஏன் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்தீர்கள் என கூறி கழுவி கழுவி ஊற்றிவருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: bigg boss tamil 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X