»   »   »  3 ஆண்டுக்குள் நடிகர் சங்க கட்டிடம்... அதன்பிறகே டும்டும்டும்... விஷால் உறுதி- வீடியோ

3 ஆண்டுக்குள் நடிகர் சங்க கட்டிடம்... அதன்பிறகே டும்டும்டும்... விஷால் உறுதி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை தி. நகரில் உள்ள சங்க மைதானத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் நடந்த இடத்தில் தள்ளுமுள்ளு, தடியடி, கைது என்று பல பிரச்சனைகள் நடந்தபோதும், கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் விஷால். அப்போது அவர், "3 ஆண்டுக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும். அதன் பிறகே திருமணம் செய்து கொள்வேன். நடிகர் சங்க கட்டிடத்தில் தான் என் திருமணம் நடைபெறும்" என்றார். மேலும், இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வராதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "பொதுக்குழுவுக்கு வரக்ககூடாது என்று எந்த உறுப்பினரையும் தடுக்கவில்லை. பொதுக்குழுவுக்கு எல்லா நடிகர்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தோம். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப படப்பிடிப்பு காரணமாக சிலரால் பங்கேற்க இயலவில்லை" என பதிலளித்தார்.

English summary
Actor Vishal has said that he will marry after the construction of Nadigar Sangam building.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil