»   »  இயக்குநர் ரொம்ப தைரியமான ஆளு.... நடிகை ஆண்ட்ரியா புகழ்ச்சி : வீடியோ

இயக்குநர் ரொம்ப தைரியமான ஆளு.... நடிகை ஆண்ட்ரியா புகழ்ச்சி : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தரமணி போல் ஒரு திரைப்படம் எடுக்க அலாதியான தைரியம் வேண்டும். அது இயக்குநர் ராமுக்கு இருந்ததால் தான் இந்தப் படம் வெற்றியடைந்துள்ளது என நடிகை ஆண்ட்ரியா பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ராம் இயக்கி வெளி வந்திருக்கும் திரைப்படம் தரமணி. விவாகரத்தான பெண்ணின் மன உணர்வுகளை பற்றிப் பேசும் படம். இதில் ஆண்ட்ரியா, வசந்த ரவி என்னும் புதுமுக நடிகர் மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர். இப்படம் தற்போது திரையரங்குகலில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

In Taramani success meet Andrea appreciated Director Ram

இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. அதில் பேசிய புதுமுக நடிகர், இந்த பாராட்டுக்காகவும் வெற்றிக்காகவும் தான் நான் பல ஆண்டுகள் காத்திருந்தேன் என சந்தோஷம் பொங்கக் கூறினார்.

இந்த விழாவில் பேசிய ஆண்ட்ரியா, இப்படி ஒரு திரைப்படத்தையும் கதாபாத்திரத்தையும் உருவாக்கும் தைரியம் யாருக்கும் வராது. ஆனால் அந்த தைரியம் இயக்குநர் ராமுக்கு இருந்த காரணத்தினால் தான் இப்படம் வெற்றியடைந்திருக்கிறது.

இப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்த காரணத்தினால் தான் நான் இதில் நடித்தேன் என இயக்குநரை பாராட்டித் தள்ளியுள்ளார் ஆண்ட்ரியா.

English summary
In Taramani success meet Andrea appreciated Director Ram to the extend. Taramani is running in theatres successfully.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil