»   »   »  கடவுள் இருக்கான் குமாரு.. டாஸ்மாக் இல்லாத ராஜேஸ் படம்: டீசர் வெளியீடு - வீடியோ

கடவுள் இருக்கான் குமாரு.. டாஸ்மாக் இல்லாத ராஜேஸ் படம்: டீசர் வெளியீடு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் இப்போது படத்தின் போஸ்டரை வெளியிடவும், டீசரை வெளியிடவும் விழா எடுக்கின்றனர். அப்படித்தான் திரைப்படங்களை இன்றைக்கு விளம்பரம் செய்ய வேண்டியுள்ளது. அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் - கடவுள் இருக்கான் குமாரு. இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரை கலைப்புலி தாணு வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர். இந்தப்படத்தில் நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பனாக நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

English summary
Kadavul Irukan Kumaru Teaser Launch Videos. G.V.Prakash, Kayal Anandhi, R.J.Balaji.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil