»   »   »  ஒரு சாமானியனுக்குக் கிடைத்த விருது - தேசிய விருது பெற்ற பாடகர் சுந்தர் அய்யர் - வீடியோ

ஒரு சாமானியனுக்குக் கிடைத்த விருது - தேசிய விருது பெற்ற பாடகர் சுந்தர் அய்யர் - வீடியோ

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோக்கர் படத்தில் 'ஜாஸ்மீன்' பாடலைப் பாடிய சுந்தர் அய்யருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இது ஒரு சாமானியனுக்குக் கிடைத்த விருது என சுந்தர் ஐயர் கூறியுள்ளார்.

64ஆவது தேசிய விருது, அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த தமிழ்ப் படம் என்ற விருது ஜோக்கர் திரைப்படத்துக்குக் கிடைத்தது. அந்த படத்தில் 'ஜாஸ்மீனு' என்ற பாடலைப் பாடிய சுந்தர் அய்யர் என்பவருக்கு சிறந்த பாடகர் விருது கிடைத்துள்ளது.

 National award given to joker film singer sundar Iyer

இந்த விருது குறித்து பாடகர் சுந்தர் அய்யர் கூறியதாவது: நான் முதன்முதலில் பாடிய பாடலுக்கே விருது கிடைத்துள்ளது என்பது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். நான் சாமானிய குடும்பத்திலிருந்து வந்தவன். என் பெற்றோர்கள் விவசாயிகள். எந்த இசை பாரம்பரியமும் இல்லாத எனக்கு, முதல் பாடலுக்கே தேசிய விருது கிடைத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

இந்த வாய்ப்பைக் கொடுத்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் இயக்குநர் ராஜுமுருகனுக்கும் தயாரிப்பாளார் எஸ்.ஆர் பிரபுவுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தேசிய விருது பாடகர் சுந்தர் அய்யர் கூறினார்.

English summary
This national award is given to a man from ordinary family. I don't have any music back round. i got this award for my very first song told National award winner singer Sundar iyer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil