»   »   »  பலத்த களபரங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடந்து முடிந்த நடிகர் சங்க கூட்டம்- வீடியோ

பலத்த களபரங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடந்து முடிந்த நடிகர் சங்க கூட்டம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம், நேற்று தி.நகரில் உள்ள நடிகர் சங்கத்தின் சொந்த இடத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பழம்பெரும் நடிகர், நடிகையர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கினார். பகல் 2 மணியளவில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தப் பொதுக்குழுவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார், நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சமந்தா உட்பட முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. வெளியில் பல்வேறு மோதல் சம்பவங்கள் நடைபெற்ற போதும், பொதுக்குழுக் கூட்டம் எவ்வித இடையூறும் இன்றி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

English summary
The 63rd annual general body meeting of the Nadigar Sangam held in Chennai yesterday with tight security.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil