»   »   »  ப்பா.. எனக்கு எவ்ளோ நேரம் முடி வெட்டினார்கள்... ரூபாய் படவிழாவில் சின்னிஜெயந்த் கலகல- வீடியோ

ப்பா.. எனக்கு எவ்ளோ நேரம் முடி வெட்டினார்கள்... ரூபாய் படவிழாவில் சின்னிஜெயந்த் கலகல- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபு சாலமன் தயாரிப்பில் சந்திரனும், ஆனந்தியும் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ரூபாய். இப்படத்தை சாட்டை படத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார், இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. அதில் ரூபாய் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய சின்னிஜெயந்த், "இந்தப் படத்தில் நாயகியின் அப்பா வேடம் எனக்கு. நிஜத்தில் எனக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள் என்பதால் மிகுந்த சந்தோஷத்துடன் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். இந்தப் படத்திற்காக பைபாஸ் சர்ஜரி செய்வதை விட கூடுதல் நேரம் எனக்கு முடி வெட்டி அழகு பார்த்தார்கள் இயக்குநரும், தயாரிப்பாளரும்" என நகைச்சுவையாகப் பேசினார்.

English summary
Rupai is an upcoming Tamil action film directed by Anbazhagan and produced by Prabhu Solomon, starring Chandran and Anandhi in the leading roles. This movie's audio release function was held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil