»   »   »  அரசியல் பிரவேசம்... 3 குழந்தைகள்... சாயா பட விழாவில் பல ரகசியங்களைப் போட்டுடைத்த நமீதா: வீடியோ

அரசியல் பிரவேசம்... 3 குழந்தைகள்... சாயா பட விழாவில் பல ரகசியங்களைப் போட்டுடைத்த நமீதா: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ்.பழனிவேல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் 'சாயா'. இதில் சோனியா அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.சி.ஜான்பீட்டர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை ஆர்.கே.ஸ்டுடியோவில் நடிபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நமீதா பேசுகையில், "இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சி. சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன, அதனால் தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்" என்றார். மேலும், "எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம், நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக் கொள்கிறேன்" என அவர் தெரிவித்தார்.

English summary
Saaya is an upcoming Tamil Movie Directed by VS Palanivel. In this movie's audio release function actress Namitha explained about her involvement in politics.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil