»   »   »  கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு.. உறுப்பினர்கள் கைது... நடிகர் சங்க கூட்டத்தில் மோதல்- வீடியோ

கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு.. உறுப்பினர்கள் கைது... நடிகர் சங்க கூட்டத்தில் மோதல்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் சங்க பொதுக் கூழு கூட்டம், நடிகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொள்ள சில உறுப்பினர்கள் அடையாள அட்டை இல்லாமல் வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அவர்களை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், சங்க உறுப்பினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் அது மோதலாக மாறியது. இதில், சங்க வளாகத்திற்கு அருகில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நடிகர் சங்க வளாகப் பகுதி கலவர பூமி போன்று காட்சியளித்தது. மோதலில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கூட்டம் தடையின்றி நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Clash broke out between police and Nadigar sangam members during the annual general body meet in which actor Karunas' car got damaged.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil