»   »  ஜோதிகாவின் கணவராக நடிக்கும் மைனாவின் காதலர்

ஜோதிகாவின் கணவராக நடிக்கும் மைனாவின் காதலர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தும்ஹாரி சுலு ரீமேக்கில் ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார் விதார்த்.

வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான இந்தி படமான தும்ஹாரி சுலு தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

தன் பட ரீமேக்கில் ஜோதிகா நடிப்பதை அறிந்து வித்யா பாலன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

விதார்த்

விதார்த்

தும்ஹாரி சுலு படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக விதார்த் நடிக்கிறார். சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்காமல் போராடும் விதார்த்துக்கு இந்த படம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணவர்

கணவர்

இது வழக்கமான ஹீரோ கதாபாத்திரம் கிடையாது. கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடிக்கும் நடிகரை தேடினோம். தற்போதுள்ள இளம் நடிகர்களில் விதார்த் தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று தேர்வு செய்தோம் என்கிறார் ராதா மோகன்.

ஹீரோயிசம்

ஹீரோயிசம்

ஹீரோயிசம் காட்டாத ஹீரோவை தேடியபோது தான் விதார்த்தை தேர்வு செய்துள்ளனர். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் விதார்த்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை ஆகிய படங்களில் சிறப்பாக நடித்திருந்த விதார்த் ஜோதிகாவின் படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Vidharth is set to act as Jyothika's husband in the tamil remake of hit movie Tumhari Sulu. Jyothika who is very choosy about her movies is portraying Vidya Balan's character in the remake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X