»   »  குற்றமே தண்டனையை அடுத்து 'வண்டி'யில் கிளம்பிய விதார்த்

குற்றமே தண்டனையை அடுத்து 'வண்டி'யில் கிளம்பிய விதார்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குற்றமே தண்டனை படத்தை அடுத்து விதார்த் வண்டி படத்தில் நடித்து வருகிறார்.

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விதார்த்துக்கு மைனா படம் பெயர் வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் அவருக்கு அண்மையில் வெளியான குற்றமே தண்டனை படம் கை கொடுத்தது.

Vidharth is all busy with Vandi

குற்றமே தண்டனை படத்தை காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இயக்கினார். இந்நிலையில் விதார்த் ராஜேஷ் பாலா இயக்கத்தில் வண்டி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் துவங்கி நடந்து வருகிறது.

இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். சித்து பிளஸ் 2 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சாந்தினி. இப்படத்தை எழுதி இயக்குபவர் ராஜேஷ் பாலா. இப்படத்தை தயாரிப்பவர் ஹஸீர். கண்ணன் ப்ரொடக்ஷன் கண்ட்ரோலராக வலம் வருகிறார்.

Vidharth is all busy with Vandi

பெயரை பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்கும் படத்தில் வண்டிக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று. வாழ்த்துக்கள் விதார்த்.

English summary
Vidharth has started acting in his next film titled Vandi being directed by Rajesh Bala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil