»   »  அது என்ன விதி - மதி உல்டா?

அது என்ன விதி - மதி உல்டா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரமீஸ் ராஜாவை நினைவிருக்கிறதா... பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அல்ல... டார்லிங் 2 நாயகன் கம் தயாரிப்பாளர்.

இவர் தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 'டார்லிங்-2' படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரமீஸ் ராஜா.


சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் ஹாரர் படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தில் இவருடன் கலையரசன், முனீஷ், காளி வெங்கட், மெட்ராஸ் ஜனனி, அர்ஜுனன், மாயா என்ற புதுமுக நாயகி நடித்திருந்தார்.


ஏஆர் முருகதாஸ் உதவியாளர்

ஏஆர் முருகதாஸ் உதவியாளர்

இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய பாலஜியின் இயக்கத்தில் தற்போது `விதி-மதி உல்ட்டா' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் பாலாஜி இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஜனனி அய்யர்

ஜனனி அய்யர்

இந்த படத்தில், இவருடன் இணைந்து டேனியல் பாலாஜி, கருணாகரன், செண்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். ஜனனி ஐயர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தபடத்தில் ஜி.வி.பிரகாஷ் கானாபாலா ஒரு பாடலை பாடியிருக்கின்றனர்.
இதான் கதை

இதான் கதை

கொடூரமான தாதாவிடம் சிக்கிக் கொள்ளும் தனது குடும்பத்தையும், காதலியையும், ஒரு மிடில்கிளாஸ் பையன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதை தான் இப்படத்தின் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள். இதை காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். தாதாவிடம் மோதும் மிடில்கிளாஸ் பையனாக ரமீஸ் ராஜா நடித்திருக்கிறார்.


இசை - ட்ரைலர்

இசை - ட்ரைலர்

இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் ஜுலை மாதம் நடைபெற இருக்கிறது.


ரமீஸ் ராஜா கதாநாயகனாக நடிக்கும் 3-வது படமாக மர்டர் மிஸ்ட்ரி கதையமைப்புக் கொண்ட படம் உருவாகி வருகிறது. இதில் முன்னணி நடிகர், நடிகையர்கள் பணியாற்றவிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கான டைட்டிலும், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் விரைவில் அறிவிக்கப்படும் என்று நாயகன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
English summary
Darling 2 hero Rameez Raja is playing lead role in Vidhi Mathi Ulta movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil