»   »  காணும் கனவு நிஜமானால்.... 'விதி மதி உல்டா'!

காணும் கனவு நிஜமானால்.... 'விதி மதி உல்டா'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மனிதன் கனவில் காண்கின்ற காட்சிகளெல்லாம் நிஜமாகி நேரில் வந்தால் மனித வாழ்க்கையே விபரீதமாகிவிடும். அந்த விபரீதமே விதியானால் அந்த விதியை மதியால் வெல்லமுடியுமா? முடியாதா?

இதையே கதைக் கருவாகக் கொண்டு ஒரு படம் உருவாகிறது. இதற்கு விதி மதி உல்டா என தலைப்பிட்டுள்ளனர்.

Vidhi Mathi Ulta... movie based on dreams

இந்தப் படத்தில் டார்லிங்-2 படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் ரமீஸ் ராஜாவுக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். மேலும், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

Vidhi Mathi Ulta... movie based on dreams

"இப்படம் காமெடி கலந்த திரில்லர் கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு அஸ்வின் இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். மேலும், கானா பாலா, அந்தோணி தாஸ் உள்ளிட்டோரும் பாடல் பாடியுள்ளனர்.

இப்படத்திற்கான அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து வருகிறது," என்றார் இயக்குநர் விஜய் பாலாஜி.

Vidhi Mathi Ulta... movie based on dreams

படத்துக்கு மார்ட்டின் ஜோ என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

English summary
Darling 2 hero Rameez Raja is playing lead role again in Vidhi Mathi Ulta.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil