விடுதலை படத்தின் ஸ்பெஷல் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி: ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட் கன்ஃபார்ம்

கொடைக்கானல்: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

கொடைக்கானலில் நடைபெற்று வந்த விடுதலை ஷூட்டிங் குறித்து விஜய் சேதுபதி சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இரண்டு பாகங்களாக விடுதலை

இரண்டு பாகங்களாக விடுதலை

தமிழில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி இருவரும் லீடிங் ரோலில் நடிக்கும் விடுதலை படத்தின் ஷூட்டிங் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும் படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்தை இந்தாண்டுக்குள் வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இதனால், இறுதிக்கட்ட ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

கொடைக்கானல் சென்ற படக்குழு

கொடைக்கானல் சென்ற படக்குழு

சென்னை, சத்தியமங்கலம் வனப்பகுதி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காடுகளில் விடுதலை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தன. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வனப் பகுதிகளில் தான் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விடுதலை படத்தின் முக்கியமான சில காட்சிகளை எடுக்க படக்குழு கொடைக்கானல் சென்றிருந்தனர். கடந்த சில தினங்களாகவே கொடைக்கானல் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விடுதலை படத்தின் சூட்டிங் நடைபெற்றது. மேலும், இதுதான் இறுதிக்கட்ட படப்பிடிப்பாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

சூட்டிங் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

சூட்டிங் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

இந்நிலையில், கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று வந்த விடுதலை பட ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள விஜய் சேதுபதி, "விடுதலை ஷூட்டிங் கொடைக்கானலில் நிறைவடைந்தது, பீட்டர் ஹெய்ன் வெறித்தனமான ஆக்சன் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார்" என கூறியுள்ளார். மேலும், கொடைக்கானல் ஷெட்யூலை முடித்துவிட்ட பின்னர் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

சொல்லி அடிக்கும் வெற்றிமாறன்

சொல்லி அடிக்கும் வெற்றிமாறன்

கடந்த சில தினங்களாகவே விடுதலை படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி குறித்து தகவல்கள் வெளிவந்தபடி உள்ளன. அதன்படி முதல் பாகத்தின் இறுதியில் சிங்கிள் ஷாட்டில் பிரம்மாண்டமாக சண்டைக் காட்சி இருக்கும் என சொல்லப்பட்டது. ஏற்கனவே அதுகுறித்த போட்டோக்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதியின் அப்டேட்டை வைத்து பார்க்கும் போது, விடுதலை படத்தின் ஆக்சன் காட்சிகளில் வெற்றிமாறன் தரமான சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், விடுதலை திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X