விடுதலை செகண்ட் பார்ட் ஷூட்டிங் பத்தி தரமான அப்டேட்: இனி ரிலீஸ் தேதி மட்டும் தான் கன்ஃபார்ம் ஆகணும்
சென்னை: வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார்.
Recommended Video
ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை பின்னணியாகக் கொண்டு விடுதலை உருவாகி வருகிறது.
இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என கூறப்படும் நிலையில், சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

விடுதலைக்காக ரசிகர்கள் காத்திருப்பு
தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான இயக்குநரான வெற்றிமாறன், தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். தனுஷின் அசுரனுக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்திற்கு, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்' என்ற சிறுகதையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வருகிறது. தனது படங்களுக்கான கதைகளை படைப்பிலக்கியங்களில் இருந்து எடுப்பதே வெற்றிமாறனின் வழக்கம். அதனை தரமான படைப்பாக திரையில் கொண்டுவருவதில் வெற்றிமாறன் தன்னிரகற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய் சேதுபதி, சூரி காம்போ
சூரி முதன்மை பாத்திரத்திலும், விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டரிலும் நடித்து வருகின்றனர். போலீஸ் யூனிஃபார்மில் சூரி கையில் துப்பாக்கியுடனும், விஜய் சேதுபதி கைவிலங்குடனும் இருக்கும் போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இவர்களுடன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, ஜிவி பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இரண்டு பாகங்களாக விடுதலை
விடுதலை படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்கிறார். கலை இயக்குநர் ஜாக்கிக்கு இது சவாலான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்புக்காக சத்தியமங்கலம் சென்ற படக்குழு, அங்கே பர்மிஷன் சிக்கல் காரணமாக, திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலையிலும் சென்னையிலும் எடுத்து முடித்துள்ளனர். இதுவரை எடுக்கப்பட்ட நீளம் கருதி, விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளிக்கொண்டு வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை ஷூட்டிங் நிறைவு
விடுதலை படத்தில் விஜய் சேதுபதிக்கான போர்ஷன் முழுமையாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதாகவும், இரண்டாம் பாகம் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் 90% படப்பிடிப்பை முடித்துவிட்ட படக்குழு, விரைவில் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











