வெற்றிமாறன் பிறந்தநாள்… அழகாக வாழ்த்திய சூரி… சூப்பர் அப்டேட் கொடுத்த விடுதலை படக்குழு…

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வெற்றிமாறன் பிறந்தநாளுக்கு நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அழகாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

47வது வயதில் வெற்றிமாறன்

47வது வயதில் வெற்றிமாறன்

'பொல்லாதவன்' மூலம் அறிமுகமான வெற்றிமாறனுக்கு இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு. 15 ஆண்டுகால திரைப் பயணத்தில் விடுதலை உட்பட 7 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் வெற்றிமாறன். ஆனாலும் அவர் திரைப்படங்களில் இருக்கும் அடர்த்தியான திரைமொழியும் வாழ்வியல் அனுபவங்களும், தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்கது. தற்போது விடுதலை படத்தில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன், அடுத்ததாக சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

வெற்றிமாறனுக்கு வாழ்த்து சொன்ன சூரி

வெற்றிமாறனுக்கு வாழ்த்து சொன்ன சூரி

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் விடுதலை படத்தில், சூரியும் விஜய் சேதுபதியும் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் சூரி, வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில், "மக்கள் வாழ்வியல் பேசும் உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் மாபெரும் படைப்பாளி, அறம் போற்றும் விவசாயி, கடும் உழைப்பாளி அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்‌" என பதிவிட்டுள்ளார்.

படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்

படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்

நடிகர் சூரியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு பல்வேறு திரை பிரலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலை படத்தின் சூப்பரான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் 90 சதவீதம் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விரைவில் முழு படப்பிடிப்பையும் முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இதனிடையே விடுதலை திரைப்படம், 2 பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கண்டிப்பா தரமான சம்பம் தான்

கண்டிப்பா தரமான சம்பம் தான்

வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொல்லாதவன் முதல் அசுரன் வரை தனது படங்கள் அனைத்தையும் ரசிகர்களுக்கு தரமாக விருந்து படைத்து வருகிறார் வெற்றிமாறன். அதனால், விடுதலை படமும் கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக விடுதலை படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளது, இன்னும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X