»   »  சிறையில் கம்பி எண்ணிய நடிகை வித்யா பாலன்: ரசிகர்கள் அதிர்ச்சி

சிறையில் கம்பி எண்ணிய நடிகை வித்யா பாலன்: ரசிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என்னது நடிகை வித்யா பாலன் சிறையில் கம்பி எண்ணினாரா என்று ஷாக் ஆகிட்டீங்களா. இது தான் அவருக்கு வேண்டும்.

பாலிவுட் நடிகை வித்யா பாலன் கஹானி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். சுஜோய் கோஷ் இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது.

பாலிவுட்காரர்கள் தான் படங்களை விளம்பரம் செய்வதில் கில்லாடிகள் ஆச்சே. வித்யா பாலன் மட்டும் சும்மா இருப்பாரா?

விளம்பரம்

விளம்பரம்

கஹானி 2 படத்தை எப்படி வித்தியாசமாக விளம்பரம் செய்யலாம் என வித்யா பாலன் மற்றும் படக்குழுவினர் ரூம் போட்டு யோசித்தனர். அப்போது தான் அவர்களுக்கு ஒரு வினோத ஐடியா வந்தது.

சிறை

சிறை

வித்யா பாலன் கையில் விலங்கு மாட்டி அவரை சிறையில் அடைத்து கம்பி எண்ண வைத்தால் அய்யய்யோ நடிகை வித்யாவை கைது செய்துவிட்டார்களாமே என ஆளாளுக்கு பரபரப்பாக பேசுவார்கள் என்று ஐடியா செய்தது படக்குழு.

வித்யா

வித்யா

கஹானி 2 பட விளம்பர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேட்டி அளித்தார் வித்யா பாலன். அந்த பேட்டியின்போது சிறை செட்டில் கையில் விலங்குடன் கம்பி எண்ணியபடியே பேசினார் வித்யா.

உடை

படத்தின் விளம்பர நிகழ்ச்சி என்றால் நடிகைகள் கவர்ச்சியான உடையில் வருவார்கள். வித்யாவோ குர்தா, ஸ்வெட்டர், ஸ்கார்ப் அணிந்து வந்திருந்தார். கையில் விலங்குடன் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மூலம் படத்திற்கு நல்லாவே விளம்பரம் தேடிவிட்டனர்.

English summary
Vidya Balan goes behind bars to promote her upcoming movie Kahaani 2 that will hit the screens on december 2.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil