பார்வையாளர்கள் தேர்வு செய்த அந்த 3 ஸ்டிராங் போட்டியாளர்கள்

சென்னை : கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்கார்டு என்ட்ரி மூலம் அபிஷேக் ராஜா மீண்டும் வந்துள்ளார். அவரை சந்தோஷமாக ஹவுஸ்மேட்கள் வரவேற்றள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 48 வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. ஏழாவது வாரத்தில் 12 பேர் போட்டியாளர்களாக வீட்டிற்குள் உள்ளனர். தற்போது அபிஷேக்கையும் சேர்த்து 13 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

நிகழ்ச்சி எப்படி இருக்கு

நிகழ்ச்சி எப்படி இருக்கு

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ மற்றும் எபிசோட்டில் கமல், பார்வையாளர்களிடம் 50 வது நாளை நிகழ்ச்சி நெருங்கி வருகிறது. இதுவரை நடந்ததில் உங்கள் பார்வையில் இந்த சீசன் எப்படி இருக்கிறது என கருத்து கேட்கிறார். இதில் பார்வையாளர்கள் எதிர்பாராத விதமாக போராட்டியாளர்கள் பற்றி கூறுகிறார்கள்.

ஸ்டிராங் போட்டியாளர்கள்

ஸ்டிராங் போட்டியாளர்கள்

இதில் ஒருவர் ராஜு, வருண், சிபி ஆகிய மூன்று பேரும் டஃப் போட்டியாளர்கள் என தேர்வு செய்து சொல்கிறார். ராஜு, பிரியங்காவிடம் நடந்து கொண்டது பிடிக்கவில்லை. இது தவறாக இன்ஃபுலியன்ஸ் செய்வதை போல் இருக்கும் என்கிறார்.

பட்டியலிட்ட பார்வையாளர்கள்

பட்டியலிட்ட பார்வையாளர்கள்

போட்டி பற்றி கமல் கேட்டதற்கு, பார்வையாளர்கள் போட்டியாளர்கள் பற்றி கருத்து கூறி உள்ளனர். முதல் நபரே வலிமையான போட்டியாளர்கள் யார் என மூன்று பேரின் பெயரை பட்டியலிட்டு சொன்னது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே சமயம் வலுவான போட்டியாளர் என கூறப்படும் பிரியங்கா, அபிஷேக் வந்த பிறகு சற்று மாறி உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

 விரும்பாத போட்டியாளர்கள்

விரும்பாத போட்டியாளர்கள்

அபிஷேக் திரும்பி வந்ததை போட்டியாளர்கள் பலர் விரும்பவில்லை என்பதை அவர்கள் நடவடிக்கை காட்டி உள்ளது. இப்போ தான் பிரியங்காவிடம் நெருங்கி பேச ஆரம்பித்தேன் என ராஜு வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார். இது கலாய்ப்பதாக தெரிந்தாலும் அபிஷேக்கிடம் நேருக்கு நேராக ராஜு சொல்லி உள்ளார்.

என்ன நடக்கிறது இங்கே

என்ன நடக்கிறது இங்கே

இதே கருத்தை வேறு விதமாக இமான் அண்ணாச்சியும் கூறி உள்ளார். தனியார் ராஜு, ஐக்கி ஆகியோரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, என்ன நடக்குது இங்க. நேற்று இரவு வந்தது முதல் பாவனிக்கு இவன் சப்பாத்தி ஊட்டுறான். இவனுக்கு எல்லோரும் ஊட்டுகிறார்கள் என்கிறார். அதற்கு ராஜு, சிலர் அவன் வெளியேறிய போது வருத்தத்தில் இருந்திருக்கலாம். அதனால் அந்த உணர்வை காட்டுகிறார்கள் என்கிறார்.

அபிஷேக்கை விரும்பாத அண்ணாச்சி

அபிஷேக்கை விரும்பாத அண்ணாச்சி

பதிலுக்கு இமான் அண்ணாச்சி, அவன் போன போது எனக்கு வருத்தமும் இல்லை. திரும்பி வந்ததால் எந்த சந்தோஷமும் இல்லை என்கிறார். இருந்தாலும் அண்ணாச்சியின் முக பாவணை அபிஷேக் திரும்பி வந்ததை பிடிக்கவில்லை என காட்டுவதாக உள்ளதாக நடெ்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X