»   »  பிரபல டிவி சீரியலுக்கு எதிராக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார்

பிரபல டிவி சீரியலுக்கு எதிராக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டிஆர்பிக்காக ஒரே மாதிரியான காட்சிகளை காட்டுவதாகக் கூறி பிரபல டிவி சீரியலுக்கு எதிராக பார்வையாளர்கள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இல்லத்தரசிகளில் பலர் டிவி சீரியல் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டனர். இது தான் உண்மை. டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும்போது கரண்ட் போனால் மின்வாரியத்தினரை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டி சாபமிடுகிறார்கள்.


அந்த அளவுக்கு அவர்கள் டிவி சீரியல்களோடு ஒன்றிவிட்டனர்.


இந்தி சீரியல்

இந்தி சீரியல்

இந்தியில் கும்கும் பாக்யா என்ற டிவி சீரியல் தான் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு ஜோடியை சேர விடாமல் இரண்டு பெண்கள் சதி செய்வதையே காட்டுகிறார்கள்.


கடுப்பு

கடுப்பு

கும்கும் பாக்யா சீரியலை பார்த்து கடுப்பான பார்வையாளர்கள் அதை உடனே நிறுத்துமாறு கூறி சமூக வலைதளங்களில் கலாய்த்தனர். தமிழ் ரசிகர்கள் பிக் பாஸை நிறுத்தக் கோரி கலாய்ப்பது போன்று தான்.


புகார்

புகார்

டிஆர்பிக்காக ஒரே வகையான காட்சிகளை காட்டும் கும்கும் பாக்யா சீரியலை உடனே நிறுத்தக் கோரி பார்வையாளர்கள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.


அப்படியா?

அப்படியா?

என்னங்க உங்கள் சீரியலுக்கு எதிராக பார்வையாளர்களே புகார் அளித்துள்ளார்கள் என்று சீரியலின் நாயகி ஷிகா சிங்கிடம் கேட்டதற்கு எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றார்.


English summary
Viewers have complained against the hindi TV serial Kumkum Bhagya at the National Consumer Complaint Forum.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil