For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஏகே 62 வில் தோனி ஸ்டைலில் வேலை செய்வேன்... அப்படி என்ன செய்ய போகிறார் விக்னேஷ் சிவன் ?

  |

  சென்னை : ஏகே 62 படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி ஸ்டைலில் வேலை செய்ய போவதாக டைரக்டர் விக்னேஷ் சிவன் கூறி உள்ளார். விக்னேஷ் சிவன் எதை சொல்கிறார், அப்படி என்ன பண்ண போகிறார் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

  அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் ஷுட்டிங், ஐதராபாத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் விறுவிறுப்பாக ஷுட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

   தளபதி 66 ,டிரைவர் ஜமுனா, தில் ராஜு... இது தான் நெக்ஸ்ட் திட்டமா ? தளபதி 66 ,டிரைவர் ஜமுனா, தில் ராஜு... இது தான் நெக்ஸ்ட் திட்டமா ?

  ஏகே 62 அறிவிப்பு

  ஏகே 62 அறிவிப்பு

  ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவாகும் ஏகே 61 படத்தின் வேலைகள் ஆரம்பித்த உடனேயே ஏகே 62 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விட்டது லைகா ப்ரொடக்ஷன்ஸ். அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை தாங்கள் தான் தயாரிக்க போவதாகவும், இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் அறிவித்து விட்டது. ஏகே 62 படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

  3 ஆண்டுகள் உழைத்தேன்

  3 ஆண்டுகள் உழைத்தேன்

  இந்நிலையில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ப்ரொமோஷனுக்காக ட்விட்டர் ஸ்பேசில் பேசிய விக்னேஷ் சிவனிடம் ஏகே 62 கதை பற்றி அஜித் ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த விக்கி, ஏகே 62 கதைக்காக 3 ஆண்டுகள் உழைத்துள்ளேன். நிச்சயம் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் இந்த படம் இருக்கும். மங்காத்தா படத்தில் வரும் அஜித் கேரக்டரை போல் ஒரு விஷயத்தை இதில் டிரை பண்ண போகிறேன் என்றார்.

  விக்கியை கலாய்த்த நெட்டிசன்கள்

  விக்கியை கலாய்த்த நெட்டிசன்கள்

  விக்கியின் பதிலை கேட்டு பலரும் அவரை கலாய்த்தனர். ஏகே 62 படத்தை வைத்து தான் இவர் சோதனை செய்ய போகிறாரா. மங்காத்தா 2 எடுக்க பிளான் பண்ணுறாரா விக்னேஷ் சிவன் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். பீஸ்ட் படத்தை நெல்சன் சொதப்பியது போல், ஏகே 62 படத்தை சொதப்பி விடாதீர்கள் என்றும் சிலர் கேட்டு வருகின்றனர்.

  ஏகே 62 பற்றி சொல்லுங்க

  ஏகே 62 பற்றி சொல்லுங்க

  இதற்கிடையில் சித்ரா லட்சுமணனின் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவனிடம் ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்க்கும் ஏகே 62 படம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், என் இதயத்தின் ஆழத்தில் இருந்து என்னுடைய 100 சதவீதத்தை கொடுப்பேன். அஜித் சாரை பெரிய இடத்தில் நான் வைத்துள்ளேன். அவருடன் 5 நிமிடம் பேசுவதே எனக்கு மிகப் பெரிய சந்தோஷமாக இருக்கும். ஆனால் இந்த படத்திற்காக அவருடன் குறிப்பிட்ட காலம் பணியாற்றி போகிறேன் என நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  எனக்கு இதுதான் டாஸ்க்

  எனக்கு இதுதான் டாஸ்க்

  படத்தை நன்றாக பண்ண வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு உண்டு. அஜித் சார் மீது வெறித்தனமாக அன்பு வைத்துள்ள ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் இதில் நான் கொடுக்க வேண்டும். கதையை சரியாக முடிக்க வேண்டும், கதைக்கு ஏற்ற நடிகர்களை நான் சரியாக தேர்வு செய்ய வேண்டும், தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்பது தான் எனக்கு இருக்கும் டாஸ்க்.

  Recommended Video

  ரசிகர்களுடன் தியேட்டரில்.. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்த நயன்தாரா, விஜய்சேதுபதி!
  தோனி ஸ்டைல் தான்

  தோனி ஸ்டைல் தான்

  அதையும் தாண்டி தோனி சொல்வதை போல், முடிவை விட வேலையில் கவனம் செலுத்த வேண்டும். படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது பற்றி யோசிக்காமல், எனது பொறுப்பை, வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த போகிறேன். அதற்கு பிறகு தான் ரசிகர்கள், பொதுமக்களின் விமர்சனங்கள் எப்படி இருக்கும் என யோசிப்பேன் என்றார். அஜித் நடித்ததில் பிடித்த படங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த விக்கி, வாலி, காட் ஃபாதர், மங்காத்தா, விஸ்வாசம். இதெல்லாம் டாப் படங்கள். ரொம்ப பிடித்த படம் என்றால் வாலி தான் என்றார்.

  English summary
  In his recent interview Vignesh Shivan told that he will give his 100 percent for AK 62. It will satisfy Ajith's crazy fans and all type of audience. In AK 62 he will follow the words of Dhoni who said that more concentrate work rather than result.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X