குழந்தைகள் பிறக்கப் போவது குறித்து முன்பே சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்.. அதுவும் எப்படி தெரியுமா?
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவுக்கு க்யூட்டான இரு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.
திரை நட்சத்திரங்கள் ரசிகர்கள் என பலரும் இந்த நட்சத்திர தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.
சில நெட்டிசன்கள் இது தொடர்பான சந்தேகங்களையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். ஆனால், சில வாரங்களுக்கு முன்பாகவே விக்னேஷ் சிவன் தனக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்கிற சிக்னலை கொடுத்திருந்தார். அது பற்றி இங்கே பார்ப்போம்..

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்
நடிகை நயன்தாரா எந்தளவுக்கு சோஷியல் மீடியாவை பார்த்தும் அதன் ட்ரோல்களை பார்த்தும் ஒதுங்கி இருக்கிறாரோ அவருக்கு நேர் எதிராக இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலிப்பது முதல், அவருடன் கோயில்களுக்கு சென்று வந்தது, திருமண புகைப்படங்கள், ஹனிமூன் புகைப்படங்கள் என அனைத்தையுமே வெளிப்படையாக ஷேர் செய்து வந்தார்.

நிச்சயதார்த்த அறிவிப்பு
நடிகை நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் நடந்த நிச்சயதார்த்தம் குறித்தும் முன்னதாகவே இயக்குநர் விக்னேஷ் சிவன் மோதிர விரலுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து குறிப்பால் வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், தற்போது இருவரும் அப்பா அம்மா ஆகி உள்ள நிலையில், இது குறித்தும் முன்பாகவே இயக்குநர் விக்னேஷ் சிவன் சிக்னல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பற்றிய சிக்னல்
இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நடிகை நயன்தாரா துபாயில் செம சர்ப்ரைஸ் பார்ட்டியுடன் கோலாகலமாக கொண்டாடினார். விக்னேஷ் சிவனின் அம்மா மற்றும் அவரது குடும்பத்தினரையே கூட அழைத்துச் சென்று கணவரை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருந்தார். அப்போது உறவினர் குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் விளையாடிய போட்டோக்களை போட்டு, வருங்காலத்திற்கான பயிற்சி என பதிவிட்டு இருந்தார். அப்போதே, நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா? இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள போகின்றனரா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பின.

எல்லாம் இதுக்குத்தானா
இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அம்மா அப்பா ஆகி உள்ள அறிவிப்பு வெளியே வந்த நிலையில், ஓ இதுக்குத்தானா அப்போ அப்படி விக்னேஷ் சிவன் போஸ்ட் போட்டிருந்தாரு, நமக்குத்தான் தெரியல போல என ரசிகர்கள் கமெண்ட் போட்டு விக்னேஷ் சிவனையும் நயனையும் புதிதாக பிறந்துள்ள பிஞ்சுகளையும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











