Don't Miss!
- News
ட்ரோன் இயந்திரங்களால் கொசு ஒழிப்பு! சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ள புதிய முயற்சி!
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாததுஏன்..?3முக்கியக் காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Sports
ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!
- Technology
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
வன்மம் நிறைந்த ஃபேக் ரிவ்யூஸ்.. மனைவி நயன்தாரா படத்துக்காக வரிந்து கட்டிய விக்னேஷ் சிவன்!
சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பல படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், ஆண்டு இறுதியில் வெளியான கனெக்ட் படமும் பல ரசிகர்களை கனெக்ட் செய்யவில்லை என நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் பொங்கியுள்ளார்.
மற்ற படங்களுக்கு ஏன் ப்ரமோஷனுக்கு செல்வதில்லை என்கிற கேள்விக்கு நடிகை நயன்தாரா தன்னை பெரிய ஹீரோக்கள் படத்தில் ஓரமாக உட்கார வைத்து விடுவார்கள் என்கிற பயம் தான் எனக் கூறியிருந்தார்.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் படங்களை தவிர மற்ற உமன் சென்ட்ரிக் படங்களுக்கும் நயன்தாரா ப்ரமோஷனுக்கு வருவதில்லையே என நெட்டிசன்கள் பலரும் விளாசி வருகின்றனர்.
மல்லாக்க படுக்க மாட்டேன்.. அப்படியொரு பயம் எனக்கு.. பீதியை கிளப்பிய நயன்தாரா.. ஏன் தெரியுமா?

டிரெண்டாகாத நயன்தாரா
நெற்றிக்கண் படத்திற்கு கடைசியாக ப்ரமோஷன் செய்ய பேட்டி அளித்த நயன்தாரா, அதன் பின்னர் எந்தவொரு படத்துக்கும் ப்ரமோஷன் செய்யவே இல்லை. இந்நிலையில், கனெக்ட் படத்துக்காக எக்ஸ்க்ளூசிவ் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். ஆனால், அதுவும் டிரெண்டாகவில்லை. நேற்று முழுவதும் விஷாலின் லத்தி படம் டிரெண்டான அளவுக்கு கூட நயன்தாராவின் கனெக்ட் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகவில்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கனெக்ட் ஆகவில்லை
இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மாயா படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா நடித்த கனெக்ட் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சமந்தாவின் யசோதா படம் அளவுக்கு இந்த ஆண்டு நயன்தாராவின் கனெக்ட் படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றும் தியேட்டருக்கு போன ரசிகர்கள் பலரும் படமா இது என கழுவி ஊற்றி சோஷியல் மீடியாவில் கண்டபடி திட்டி வருகின்றனர்.

டெக்னிக்கல் பிரில்லியண்ட்
அதே சமயம் நயன்தாரா ரசிகர்கள் கனெக்ட் படம் டெக்னிக்கலாக மிரட்டி உள்ளது. இந்த படம் தியேட்டர் மெட்டீரியல் கண்டிப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் வரை வெயிட் செய்ய வேண்டாம், உடனடியாக படத்தை பார்த்து விடுங்க என்றும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.

கடுப்பான கணவர்
கனெக்ட் படத்தை தயாரித்துள்ள விக்னேஷ் சிவன் தனது மனைவி நடிப்பில் வெளியான கனெக்ட் படத்திற்காக பெரியளவில் ப்ரமோஷன் எல்லாம் செய்து வந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லையே என ரொம்பவே கடுப்பாகி உள்ளார். அதன் வெளிப்பாடு தான் இப்படியொரு ட்வீட் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

வன்மம் நிறைந்த ஃபேக் ரிவ்யூஸ்
நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. வசூலும் பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. இந்நிலையில், விமர்சகர் ஒருவர் ட்வீட்டை ஷேர் செய்து நன்றி கூறிய கனெக்ட் பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் நன்றி சார்.. வன்மம் நிறைந்த ஃபேக் ரிவ்யூஸ் மற்றும் கமெண்ட்டுகளுக்கு மத்தியில் இப்படியொரு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்ததற்கு என ட்வீட் போட்டுள்ளார்.

வெரி ஆவரேஜ்
டியர் விக்கி, படம் ரொம்பவே சுமாரான படம். இந்த படத்தை அனைவரும் உங்களை போல கொண்டாட வேண்டும் என நினைக்கக் கூடாது. படம் நல்லா இருந்தா நிச்சயம் பலரும் பாராட்டுவார்கள். இது உங்க படம் என்பதால் தான் நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க என ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஒப்பாரி வைக்கிற
மற்றொரு ரசிகர் யாருப்பா நீ.. படம் நல்லா இல்லைன்னு சொன்னா.. வன்மம்னு ஒப்பாரி வச்சிட்டு இருக்க என போட்டோ மீம் போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஏகே 62 படத்திலும் அஜித்துக்கு ஜோடியா நயன்தாராவை நடிக்க வைத்து அவங்களுக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் ஹிட் கொடுத்தது போல கொடுங்க விக்கி என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.