விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை : கோலிவுட்டின் பிரபலமான நட்சத்திர காதல் ஜோடியான விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து பல படங்களை கொடுத்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள முக்கோணம் காதல் கதையான இந்த படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் 2022 ம் ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வலிமை அம்மா பாடல்

வலிமை அம்மா பாடல்

இதற்கிடையில் விக்னேஷ் சிவன், அஜித் நடித்துள்ள வலிமை உள்ளிட்ட பல படங்களுக்கும் பாட்டு எழுதி அசத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் எழுதி உள்ள வலிமை படத்தின் இரண்டு பாடல்களும் செம ஹிட்டாகி உள்ளன. செகண்ட் சிங்கிளாக நேற்று வெளியிடப்பட்ட அம்மா பாடல் ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து நடத்தி வரும் ரெளடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட கூழாங்கல் பல சர்வதேச விருதுகளை வென்ற பிறகு, தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து கவினை வைத்து கூர்குருவி என்ற படத்தை இயக்க போவதாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இதையும் ரெளடி பிக்சர்ஸ் தான் தயாரிக்க போகிறது.

ரெளடி பிக்சர்சின் ராக்கி

ரெளடி பிக்சர்சின் ராக்கி

இந்நிலையில் ரெளடி பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள ராக்கி படத்தின் ரிலீஸ் தேதியை விக்னேஷ் சிவன் இன்று வெளியிட்டுள்ளார். தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இவர் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜாவிடம் அசிஸ்டென்டாக பணியாற்றி உள்ளார். சுதா கொங்கரா இயக்கிய இறுதிச் சுற்று படத்திற்கு டயலாக் எழுதியவர் இவர் தான்.

முந்திக் கொண்ட சாணி காயிதம்

முந்திக் கொண்ட சாணி காயிதம்

2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட ராக்கி படம் தொடர்ந்து தாமதமாகி வந்ததால், அடுத்த படமாக சாணி காயிதம் படத்தை இயக்கி முடித்துள்ளார். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படம் த்ரில்லர் படமாகும். 1980 களில் நடப்பது போன்று இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

ராக்கி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராக்கி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில் ராக்கி படத்தின் ஷுட்டிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் நிறைவடைந்து விட்டது. இதனையடுத்து டிசம்பர் 23 ம் தேதி தியேட்டர்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போஸ்டருடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உணர்வு கலந்த கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X