எல்லாம் இவங்களால தான்... அம்மா பாடலை அம்மாவிற்கு டெடிகேட் செய்த விக்னேஷ் சிவன்

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் விக்னேஷ் சிவன். நயன்தாரா உடனான காதலுக்கு பிறகு கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடியாகவும் பிரபலமாகி விட்டார் விக்னேஷ் சிவன்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் போடும் ஒவ்வொரு ட்வீட்டும், ஃபோட்டோக்களும் வைரலாவது வழக்கம். விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் தயாரித்த கூழாங்கல் படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

காத்துவாக்கல ரெண்டு காதல்

காத்துவாக்கல ரெண்டு காதல்

டைரக்டர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 2022 ம் ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

டப்பிங் பேசும் நயன்தாரா

டப்பிங் பேசும் நயன்தாரா

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கான டப்பிங் வேலைகளை நயன்தாரா சமீபத்தில் தான் துவக்கி உள்ளார். இந்த தகவலை ஃபோட்டோவுடன், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் டையலாக்கை நீ டப்பிங் பேசுவதில் மிக்க சந்தோஷம் என ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இந்த படத்தை இயக்கியதுடன் இதற்கு வசனமும் விக்னேஷ் சிவன் தான் எழுது உள்ளார்.

விக்னேஷ் சிவன் எழுதி பாடல்

விக்னேஷ் சிவன் எழுதி பாடல்

டைரக்ஷன், டயலாக் மட்டுமல்ல தற்போது பாடல்களையும் எழுதி அசத்தி வருகிறார் விக்னேஷ் சிவன். அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்கு விக்னேஷ் சிவன் தான் பாடல்கள் எழுதி உள்ளார். விக்னேஷ் சிவனின் வரிகளில் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட, நாங்க வேற மாரி பாடல் செம ஹிட் ஆனது. அனைவரையும் ஆட்டம் போட வைத்த செம எனர்ஜிடிக்கான இந்த பாடலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உருக வைத்த அம்மா பாடல்

உருக வைத்த அம்மா பாடல்

இந்நிலையில் இரண்டாவது சிங்கிளான அம்மா பாடலையும் விக்னேஷ் சிவன் தான் எழுதி உள்ளார். இந்த பாடல் இன்று வெளியிடப்பட்டு, அனைவரிடமும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த பாடலை போனி கபூர் வெளியிட்ட சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிந்தது.

அம்மாவிற்கு டெடிகேட்

அம்மாவிற்கு டெடிகேட்

இதனையடுத்து அம்மா பாடலின் லிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், இதை தன் அம்மாவிற்கு டெடிகேட் செய்வதாக குறிப்பிட்டு, தனது அம்மாவுடன் இருக்கும் செல்ஃபியையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

இவங்க தான் காரணம்

இவங்க தான் காரணம்

விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டில், இதை எனது அன்பான அம்மா மீனாகுமாரிக்கு டெடிகேட் செய்கிறேன். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி என் அம்மா. என்னால் ஒரு அம்மா பாடலை எழுத முடியும் என எப்போதும் வாழ்த்திக் கொண்டிருப்பவர். அவரின் ஆசிர்வாதத்தால் யுவன்சங்கர் ராஜா இசையில், ஹச்.வினோத் படத்தில், ஒன் அண்ட் ஒன்லி அஜித் சாருக்காக பாடல் எழுதி உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டும் ரசிகர்கள்

பாராட்டும் ரசிகர்கள்

விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட்டை அனைவரும் ரசித்து, பாராட்டி வருகின்றனர். அம்மா பாடலின் வரிகளை குறிப்பிட்டு, மனதை உருக வைத்து விட்டதாகவும், கண்ணீர் வரவழைத்து விட்டதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர். இப்படி ஒரு அற்புதமான பாடலை தந்ததற்காக விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X