சிவகார்த்திகேயனை இயக்கும் விக்னேஷ் சிவன்: தீயா வேலை செய்யும் விக்கி
Recommended Video

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த மகிழ்ச்சியில் உள்ளார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.

விக்கி
விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்திற்கான திரைக்கதை எழுதும் வேலையை துவங்கி கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன்
விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. அந்த படத்தை ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் மூலம் தயாரிக்கிறாராம். எல்லாம் சரியாகப் போனால் வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குமாம்.

சமந்தா
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார்.

சயன்ஸ் பிக்ஷன்
சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் சயன்ஸ் பிக்ஷன் கதையில் நடிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் படம் பற்றி பேச்சு கிளம்பியுள்ளது.

மகிழ்ச்சி
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரஹ்மான் தனது படத்திற்கு இசையமைப்பதை நினைத்து சிவா மகிழ்ச்சியில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











