For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என் மருமகளுக்கு அவ்ளோ பெரிய மனசு.. மாமியார் கிட்டயே பாராட்டு வாங்கிட்டாங்களே நயன்தாரா.. சூப்பர்!

  |

  சென்னை: திருமணம் ஆனதும் பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனையே மாமியார் மருமகள் சண்டை தான்.

  ஆனால், அந்த விஷயத்திலும் நயன்தாரா கொடுத்து வைத்தவர் என்று தான் சொல்ல வேண்டும். கணவர் விக்னேஷ் சிவனை போலவே அவருக்கு அன்பான சூப்பர் மாமியார் அமைந்துள்ளார்.

  விக்னேஷ் சிவனின் அம்மா மீனாகுமாரி நயன்தாராவின் நல்ல குணத்தை பாராட்டி பேசிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

  இன்ஸ்டாவில் இருந்து போட்டோவை நீக்கிய மஞ்சிமா..திருமணம் முடிவான பின்பு ஏன் இப்படி?இன்ஸ்டாவில் இருந்து போட்டோவை நீக்கிய மஞ்சிமா..திருமணம் முடிவான பின்பு ஏன் இப்படி?

   லேடி சூப்பர்ஸ்டார்

  லேடி சூப்பர்ஸ்டார்

  தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் லேடி சூப்பர்ஸ்டாராகவும் வலம் வரும் நயன்தாரா சீக்கிரமே ஷாருக்கானின் ஜவான் படம் வெளியானால் பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்குவார். இந்த ஆண்டு பிரம்மாண்டமாக நயன்தாராவின் திருமணம் அனைவரும் அறிய நடைபெற்ற நிலையில், நயன்தாரா பற்றி அவரது மாமியார் அளித்துள்ள பேட்டி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

  போலீஸ் அம்மா

  போலீஸ் அம்மா

  நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதியின் அம்மாவாக ராதிகா போலீஸாக நடித்திருப்பார். அந்த கதபாத்திரத்திற்கு இன்ஸ்பிரேஷனே விக்னேஷ் சிவனின் ரியல் அம்மா மீனாகுமாரி தான். போலீஸ் அம்மாவான மீனாகுமார் மகன் மீது வைத்த அன்பையும் பாசத்தையும் தான் அந்த படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் காட்டியிருப்பார்.

  மருமகளுக்கு சர்டிபிகேட்

  மருமகளுக்கு சர்டிபிகேட்

  கணவரை எல்லாம் காதலித்து கவிழ்த்து விடலாம். ஆனால், மாமியாரிடம் இருந்து இப்படியொரு பாராட்டுப் பத்திரம் வாங்குவது என்பதெல்லாம் பெரிய நடிகராகவே இருந்தாலும் அவ்வளவு சுலபம் இல்லை. இந்நிலையில், நயன்தாராவின் நல்ல குணம் பற்றி அவரது மாமியார் பேசியுள்ள பேட்டி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

  4 லட்சம் கொடுத்தார்

  4 லட்சம் கொடுத்தார்

  நயன்தாராவின் வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது, அயன் பண்ணுவது, தோட்டக்கலை என மொத்தம் 4 பெண்கள், 4 ஆன்கள் என 8 பேர் பணியாற்றி வருகின்றனர் என்றும் அதில் நீண்ட காலமாக வேலை பார்த்து வரும் ஒரு அம்மா நான் நயன்தாரா வீட்டுக்கு போயிருந்தப்ப ரொம்பவே சோகமாக இருந்தார். அதை கவனித்த என் மருமக உடனடியாக உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கும்மா எனக் கேட்க, 4 லட்சம் கடன் இருக்கும்மா என அந்த அம்மா அழ, உடனடியாக அவ்வளவுதானே நான் தரேன் என உடனடியாக 4 லட்சத்தை தூக்கிக் கொடுத்து அவரது துயர் துடைத்தார் நயன்தாரா என பேசியுள்ளார்.

  நயன்தாரா அம்மா அதுக்கு மேல

  நயன்தாரா அம்மா அதுக்கு மேல

  நயன்தாரா தான் இப்படி தங்கம் என பார்த்தால் அவங்க அம்மா அதுக்கு மேல சொக்கத் தங்கமா இருக்காங்க.. நயன்தாரா வீட்டுக்கு ஒரு முறை அவங்க அம்மா ஓமண குரியன் வந்திருந்தாங்க அப்போது நயன் வீட்டில் இல்லை. கஷ்டத்தில் ஒரு பெண் கவலைப்படுவதை பார்த்து விட்டு, உடனடியாக தனது கையில் போட்டு இருந்த 2 தங்க வலையல்களை அப்படியே எடுத்து அவருக்கு கொடுத்து விட்டார் என மருமகளையும் சம்மந்தியையும் புகழ்ந்துள்ளார்.

  கோல்டு வருது

  கோல்டு வருது

  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2 ஆண் குழந்தைக்கு பெற்றோர்கள் ஆகி உள்ள நிலையில், தற்போது நயன்தாரா நடித்துள்ள கோல்டு திரைப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது. பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. சிரஞ்சீவி உடன் நயன் நடித்த காட்ஃபாதர் திரைப்படம் சுமாராக ஓடிய நிலையில், இந்த படம் எப்படி இருக்கும் என வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Vignesh Shivan Mother Meenakumari praises her daughter in law Nayanthara in a latest interview. She opens up about Nayanthara donated 4 lakhs rupees immediately for her labour debts.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X